Title of the document


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.08.18

திருக்குறள்


சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.

விளக்கம்:

மிகுந்த செழிப்பைத் தருகின்ற செல்வத்தைப் பெறக் கூடுமென்றாலும் அதன் பொருட்டுப் பிறருக்குப் கேடு செய்யாமலிருப்பதே மாசற்றவர்களின் கொள்கையாகும்.

பழமொழி

All work and no play makes Jack a dull boy

ஓய்வில்லாத உழைப்பு உப்பில்லாத உணவு

இரண்டொழுக்க பண்பாடு

1. நெகிழிப்பைகள் பயன்பாட்டினை என்னால் இயன்றவரை தவிர்த்திடுவேன்...

2. இயற்கை என்பது இறைவன் கொடுத்த வரம். அதை காப்பது தம் கடமை...

 பொன்மொழி

செல்லும் பாதை சரியாக இருந்தால் வேகமாக அல்ல மெதுவாக ஓடினாலும்
வெற்றி தான்.

  அப்துல்கலாம்

பொது அறிவு

1..இயற்பியல் மற்றும் வேதியியல் இரு துறைகளுக்கும் நோபல் பரிசு பெற்ற பெண்மணி யார்?

மேரிகியூரி                                                                      .2.பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெற்ற இந்தியர் யார்?

  திரு. அமர்த்தியா சென்

English words and. Meanings

Optimism         நேர்மறைசிந்தனை
Obedience.     கீழ்படிதல்
Openness.       வெளிப்படையான
Organization.   அமைப்பு
Oasis.              பாலைவனச்சோலை




நீதிக்கதை


ஒரு நாள் ராமு தன்னுடைய சிங்கத்தை அழைத்துக்கொண்டு காட்டுப்பகுதிக்கு தேன் எடுப்பதற்காக சென்று கொண்டிருந்தான். செல்லும் வழியில் தங்களில் யார் அதிக வீரமுள்ளவர்கள் என்பதைப்பற்றி சிங்கமும் ராமுவும் பேசிக்கொண்டு சென்றனர்.

அப்போது செல்லும் வழியில், "ஒரு மனிதன் சிங்கத்தைக் கீழே தள்ளி அதன் மீது நிற்பதைப்போல" ஒரு சிலை இருந்தது.

''அதைப் பார்த்தாயா? யாருக்கு அதிக வீரம் இருக்கிறது என்பது இதிலே தெரிகிறது.'' என்றான் ராமு.

''ஓ, அது மனிதன் செய்த சிலை. ஒரு சிங்கம் அந்த சிலை செய்திருந்தால், மனிதனைக் கீழே தள்ளி அவன் மீது, தான் நிற்பது போலச் செய்திருக்கும்.'' என்று சொல்லியது சிங்கம்.

நீதி:
தனக்கென்றால் தனி வழக்குதான்.

இன்றைய செய்திகள்

24.08.2018

* பள்ளிக்கல்விதுறை செயலர் உதயசந்திரன் தொல்லியல் துறைக்கு அதிரடி இடமாற்றம்.

* மத்திய அமைச்சர் அருண் ஜேட்லிக்கு மீ்ண்டும் நிதித்துறையை ஒதுக்கீடு செய்து குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

* காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

* ஆசிய விளையாட்டுப் போட்டியில் தொடரும் இளம் வீரர்களின் பதக்க வேட்டை: துப்பாக்கி சுடுதலில் வெள்ளி வென்றார் 15 வயது ஷர்துல் விஹான்!

* ஆசிய விளையாட்டுப் போட்டியின் பதக்கப் பட்டியலில் வியாழக்கிழமை நிலவரப்படி இந்தியா 4 தங்கம், 4 வெள்ளி, 10 வெண்கலம் என 18 பதக்கங்களுடன் 10-ஆவது இடத்தில் உள்ளது.

Today's Headlines

🌸Mumbai:Maharashtra has announced a cash award of Rs. 50 lakh for Rahi Sarnobat, the first Indian woman shooter to win gold medal at Asian Games.

🌸 Chennai:Peace for Children,’ an initiative of Shree Dayaa Foundation, was launched in the city on Tuesday, with an aim to focus on the welfare and protection of children.

🌸Coimbatore:Chief Minister Edappadi K. Palaniswami will inaugurate project ‘Uyir’, a people’s movement against road traffic accidents, here soon.

🌸Pudukkottai:Inaugurating a traditional seed festival and a minor millets value addition unit here, Mr. Chiru said the State accounted for a total of 470 farmer producers’ companies of which 100 came under agri business.

🌸Asian games:Rahi Sarnobat became the first Indian woman shooter to win a gold at the Asian Games, achieving the feat after a nerve-wracking 25m air pistol finals here on Wednesday.

Prepared by
Covai women ICT_போதிமரம்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post