Title of the document



கால்நடை மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கிராமப்புற மாணவி முதலிடம் பெற்றார். 74 சதவீத கிராமப்புற மாணவர்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

 தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சென்னை அடுத்த மாதவரத்தில் உள்ளது. இதன் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டப்படிப்புக்கு (பிவிஎஸ்சி - ஏஹெச்) 360இடங்கள் உள்ளன.திருவள்ளூர் மாவட்டம் கோடுவளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் உணவுத் தொழில்நுட்பத்துக்கு 40 இடங்கள், பால்வளத் தொழில்நுட்பத்துக்கு 20 இடங்கள், ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்பத்துக்கு 40 இடங்கள் உள்ளன. இவை மூன்றும் 4 ஆண்டுகள்கொண்ட பி.டெக். பட்டப்படிப்புகள் ஆகும்.இவற்றில் தேசிய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீதம் போக, மற்ற இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. அதாவது, கால்நடை மருத்துவப் படிப்புக்கான 360 இடங்களில் தேசிய ஒதுக்கீட்டுக்கு 54 இடங்கள் போக மற்ற 306 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. அதேபோல, உணவுத் தொழில்நுட்பத்தில் உள்ள 40 இடங்களில் 6 இடங்கள், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மற்றவை மாநில அரசுக்கானவை.கால்நடை மருத்துவப் படிப்புக்கு 306 இடங்கள் மற்றும் பிடெக் படிப்புகளான 94 இடங்களுக்குஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து சமர்ப்பித்தனர்.

தரவரிசை வெளியீடு

இந்நிலையில், தரவரிசைப் பட்டியலை தமிழ்நாடுகால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சி. பாலச்சந்திரன் சென்னை வேப் பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று வெளியிட்டார். அப்போது பதிவாளர் எம்.திருநாவுக்கரசு, தேர்வுகள் கட்டுப்பாட்டாளர் கே.என்.செல்வகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

கிராமப்புற மாணவர்கள் சாதனை

கால்நடை மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலில் ஈரோடு மாவட்டம் கொடுமுடி தாலுகா பெரியவட்டம் கிராமத்தைச் சேர்ந்த பி.ஸ்ரீகார்த்திகா (கட்ஆஃப் மதிப்பெண்: 199.67) முதலிடம் பிடித்துள்ளார். இவர் குடும்பத்தின் முதல் பட்டதாரி ஆவார்.சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வி.ரஜினிரகு (கட்ஆஃப் - 199.50) இரண்டாம் இடத்தையும், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கே.பி.இந்துமதி (கட்ஆஃப் - 199.50) மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.பிடெக் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.பூஜிதா (கட்ஆஃப் - 199) முதலிடத்தையும், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.மணிவாசகம் (கட்ஆஃப் - 197.75) இரண்டாம் இடத்தையும், எஸ். இலக்கியா (கட்ஆஃப் - 197.25) மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் கிராமப்புறமாணவ, மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் துணைவேந்தர் சி. பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:தரவரிசைப் பட்டியல் www.tanuvas.ac.in மற்றும் www2.tanuvas.ac.in ஆகிய இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகளுக்கு எஸ்எம்எஸ் மூலம் அடையாள எண், பாஸ்வேர்டு அனுப்பப்படும். அவர்கள் அதை இணையதளத்தில் உள்ளீடு செய்து, தங்களுக்கான கலந்தாய்வு அழைப் புக் கடிதத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.தரவரிசைப் பட்டியலில் பெயர் இருந்து அழைப்புக் கடிதம் இல்லாவிட்டாலும் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம். கலந்தாய்வை ஜூலை 4-வது வாரத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு துணை வேந்தர் கூறினார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post