பள்ளிக்கல்வி இயக்குனர்களின் பொறுப்பு மாற்றம் : தனியார் பள்ளிகள் இயக்குனருக்கு அதிகாரம் குவிப்பு


தமிழக அரசின் புதிய சட்டப்படி, இயக்குனர்களுக்கான பொறுப்புகள் மாற்றப்பட்டுள்ளன.


   மெட்ரிக் பள்ளி இயக்குனர், தனியார் பள்ளி இயக்குனர் என, பெயர் மாற்றப்பட்டு, கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.தமிழகத்தில், அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளின் நிர்வாகத்தை, தொடக்க பள்ளி இயக்குனர் கவனித்து வந்தார்.


  அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் நிர்வாகத்தை, பள்ளிக்கல்வி இயக்குனரும், மெட்ரிக் பள்ளிகள் நிர்வாகத்தை, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனரும் கவனித்து வந்தனர்.


  இந்நிலையில், தமிழக அரசு இயற்றியுள்ள, தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டம், 2018ன் படி, இயக்குனர்களுக்கான பொறுப்புகள் மாற்றப்பட்டு உள்ளன.தனியார் பள்ளிகளுக்கு என, தனி இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளார்.


 மெட்ரிக் இயக்குனர் பதவி நீக்கப்பட்டு, அந்தப் பதவிக்கான பொறுப்புகள், தனியார் பள்ளிகள் இயக்குனர் வசம் மாற்றப்பட்டுள்ளன.


     மாற்றம் என்ன?.


  தமிழக அரசின் புதிய சட்டப்படி, ஐந்தாம் வகுப்பு வரையுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகள் மற்றும் எட்டாம் வகுப்பு வரையுள்ள நடுநிலை பள்ளிகளின் நிர்வாகத்தை, தொடக்க கல்வி இயக்குனர் கவனிப்பார்.


10ம் வகுப்பு வரை செயல்படும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளிகள், பிளஸ் 2 வரை செயல்படும், மேல்நிலை பள்ளிகள் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளை, பள்ளிக்கல்வி இயக்குனர் கவனிப்பார்.


 மெட்ரிக் பள்ளிகளுக்கு என, தனி இயக்குனர் கிடையாது. மாறாக, தனியார் பள்ளிகள் இயக்குனர் என்ற, புதிய பதவி உருவாக்கப்பட்டுள்ளது


 இவரே, தனியார் மெட்ரிக் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள்,சி.பி.எஸ்.இ., பள்ளிகள்,ஐ.சி.எஸ்.இ., பள்ளிகள், ஐ.பி., என்ற சர்வதேச பாடத்திட்ட பள்ளிகள் மற்றும் கேம்பிரிட்ஜ் போன்ற, பிறவகை பாடத்திட்ட பள்ளிகளின் நிர்வாகத்தை கவனிப்பார்


தனியார், 'பிளே ஸ்கூல்' என்ற மழலையர் பள்ளி, பிரைமரி பள்ளிகள், தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் போன்றவற்றின் நிர்வாகங்களையும், தனியார் பள்ளிகள் இயக்குனரே கவனிப்பார் என, அறிவிக்கப்பட்டு உள்ளது

Popular Posts

 

Featured post

9, 10, +1,+2 வகுப்புகள் கணினிமயமாக்கம்"விரைவில் "கணினி ஆசிரியர் தேர்வு" செய்யப்படும் அமைச்சர் செங்கோட்டையன்.!!

9, 10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளை கணினிமயமாக்கபடுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர...

Most Reading

Follow by Email