எஸ்.சி., - எஸ்.டி., கல்வி உதவித்தொகை: பள்ளிகளில் விபரம் ஒட்ட உத்தரவு!!


அரசு, அரசுஉதவி பெறும் பள்ளி தகவல் பலகைகளில், எஸ்.சி., - எஸ்.டி., உதவித்தொகை
குறித்த விபரங்களை ஒட்ட உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், எஸ்.சி., - எஸ்.டி., மாணவ, மாணவியர், கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய எஸ்.சி., - எஸ்.டி., மாணவ, மாணவியருக்கு, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதை பெற, உரிய சான்றுகளுடன், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க, அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. விண்ணப்பிக்கும்போது, இணைக்க வேண்டிய சான்று, கெடு தேதி, பெறும் பயன்கள் உள்ளிட்ட விபரங்களை, பெற்றோர் மற்றும் மாணவ, மாணவியர் அறிய, அனைத்து பள்ளி தகவல் பலகைகளில் ஒட்டிவைக்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.