Title of the document


கன்னியாகுமரி அருகே அடிப்படை வசதிகள் இல்லாத அரசு நடுநிலைப்பள்ளியை
தத்தெடுத்து தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஸ்மார்ட் வகுப்புகள் அமைத்துள்ள நக்சல் தடுப்பு பிரிவு ஆய்வாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

 கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள குற்றியாரில் நடுநிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.

ஆதி திராவிட பழங்குடியின மக்களின் குழந்தைகள் இந்த பள்ளியில் அதிக அளவில் படித்து வருகின்றனர்.
15 வருடங்களாக எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருந்து வந்த இந்த பள்ளியை கன்னியாகுமரி மாவட்ட நக்சல் பிரிவு ஆய்வாளர் சாம்சன் தத்தெடுத்தார்.

 தனியார் பள்ளிகளுக்கு நிகராக இங்கு பயிளும் மாணவர்களுக்கு காலணி, சீருடை ஆகியவற்றை வழங்கி ஸ்மார்ட் வகுப்பறைகளும் நிறுவியுள்ளார்.

மேலும் பல லட்சம் ரூபாய் செலவு செய்து பள்ளி கட்டடத்தையும் புதுபொலிவாக்கியுள்ளார். இதன் முலம் பழங்குடியின மக்களின் குழந்தைகள் தற்போது படிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

 இந்த மாற்றத்துக்கு காரணமாக இருந்த காவல் ஆய்வாளரை பெற்றோர் பாராட்டி வருகின்றனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post