ஆசிரியர்களுக்கான குறுஞ்செயலி உருவாக்கப் பயிற்சி - மேலும் ஒரு நாள் கூடுதலாக - 8 ஜூலை - 2018 Register here


அனைவருக்கும் உத்தமம் (உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப நிறுவனம்) சார்பில் வணக்கமும், வாழ்த்தும்.
 
உத்தமத்தின் 17வது உலகத்தமிழ் இணைய மாநாடு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வரும் ஜூலை 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. அதனையொட்டி பல்வேறு பயிற்சிப்பட்டறைகள் நடத்தப்பட உள்ளன. 
 
தமிழக அரசின் பாடத்திட்டங்கள் மாற்றம் பெறும் இந்நல்வேளையில் உத்தமம் நிறுவனமும் தனது பங்குக்கு சில தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சிகளில் தமிழக அரசுக்கு பங்களிப்பு செய்ய உள்ளது. இதனடிப்படையில் தமிழகம் முழுதும் உள்ள ஆசிரியர்களுக்கு குறுஞ்செயலி உருவாக்கம் மற்றும் பயிற்சிகள் அளிக்க உத்தமம் நிறுவனம் முன்வந்துள்ளது.
 
இதனடிப்படையில் மாநாடு நடைபெறும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கென்று  7, 8 ம் தேதிகளில்  ஒரு நாள் குறுஞ்செயலி உருவாக்க பயிற்சிப்பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

7ம் தேதிக்கான பயிற்சியின் முன்பதிவு நிறைவுபெற்றுவிட்டது.

ஆசிரியர்களின் பேரதாரவிற்கு இணங்க, இதே குறுஞ்செயலி உருவாக்கப் பயிற்சியை, மீண்டும் ஒரு முறை, 8 ஆம் தேதி அன்று, நடத்த உள்ளோம்.

முன்பு பதிவு செய்யாதோர், ஜூலை 8, 2018 அன்று நடைபெறும் இந்தப் பயிற்சிக்கு பதிவு செய்து, கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

 
இந்தப் பயிற்சியில்
 
குறுஞ்செயலிகளின் அடிப்படை
குறுஞ்செயலிகளின் தேவை
கல்விக்கான குறுஞ்செயலிகள்
எச்டிஎம்எல் 5 அடிப்படை
குறுஞ்செயலிகள் உருவாக்கம்
கூகிள் பிளே ஸ்டோரில் பதிவேற்றம் செய்தல்
போன்றவை இப்பயிற்சியில் இடம்பெற உள்ளன
 
ஆனால் 100 பேருக்கு மட்டுமே பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. எனவே முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற திட்டத்தின் அடிப்படையில் இப்பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
 
இப்பயிற்சிகள் கலந்துகொள்பவர்களுக்கு மதிய உணவும், சான்றிதழும் உடன் செயலி உருவாக்கத்திற்கான மூலநிரலும் வழங்கப்படும்
 
கட்டணம் : ரூ.300 மட்டும்
 
பணம் செலுத்துமிடம்

https://www.meraevents.com/event/infitt-tamil-internet-conference-2018?ucode=organizer

பணம் செலுத்திய ரசீதை நிகழ்வு நாள் என்று கண்டிப்பாக வைத்திருக்கவேண்டும்
 
 
மேலும் விபரங்களுக்கு
 
என்றும் அன்புடன்
ஸ்ரீனிவாசன் மற்றும் செல்வமுரளி
மக்கள் அரங்க ஒருங்கிணைப்பாளர்கள் 
17வது உலகத்தமிழ் இணைய மாநாடு
https://www.tamilinternetconference.org/