Title of the document


🔴தமிழகம் முழுவதும் 5,500 பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு விலக்கு உத்தரவுக்காக காத்திருக்கின்றனர்.


🔴அரசு உதவிபெறும் பள்ளிகள், சிறுபான்மையினர் பள்ளிகளில் நிரந்தர பணி இல்லாத பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் 5,500 பேர் உள்ளனர். மத்திய இடைநிலை கல்வி வாரிய உத்தரவின்படி, பணியில் தொடர ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.



🔴ஆனால், மாநிலங்கள் தமது கொள்கைக்கு ஏற்றபடி குறிப்பிட்ட நாட்களை தேர்வு செய்து, அதற்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கு தேர்வில் இருந்து விலக்கு அளிக்கலாம் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


🔴அதன்படி கேரள அரசு, 2012 மார்ச் 31க்கு முன் பணியில் சேர்ந்த பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கு விலக்கு அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. கர்நாடகா 2012 ஜூலை 28-வரை விலக்கு அளித்துள்ளது.


🔴அதுபோல் தமிழகத்தில் முன் தேதியிட்டு ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன், துறை செயலாளரிடம் 5,500 ஆசிரியர்கள் மனு அளித்தனர்.


🔴சென்னையில் நடந்த ஆசிரியர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகிகள் இதனை வலியுறுத்தினர்.ஆனால் இதுவரை அதற்கான உத்தரவு வராததால் 5,500 ஆசிரியர்கள் புலம்பி வருகின்றனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post