Title of the document
நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஜூலை முதல் வாரத்தில் தொடங்கவுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


பிளஸ் 2 படிக்கும் தமிழக மாணவர்கள் ஐஐடி ஜேஇஇ, நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளில் அதிக அளவில் வெற்றி பெறும் வகையில், ஒன்றியத்துக்கு ஒரு மையம் வீதம் மொத்தம் 412 மையங்களில் தமிழக அரசின் சார்பில் இலவசப் பயிற்சி வகுப்புகள் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கின.

இதில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த 71 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதைத்தொடர்ந்து அதில் 3,181 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கடந்த ஏப்ரல் முதல் மே மாதம் முதல் வாரம் வரை சென்னை, மதுரை உள்ளிட்ட 9 இடங்களில் தங்குமிட வசதியுடன்கூடிய சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.

 இதன் பயனாக கடந்த மே 6 }ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 1,337 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

இந்த நிலையில், "நிகழாண்டுக்கான பயிற்சி வகுப்புகள் முன்கூட்டியே தொடங்கப்படும்' என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். அதன்படி வரும் ஜூலை முதல் வாரத்திலிருந்து இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடங்கவுள்ளன.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post