Title of the document


கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலை இளநிலை படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியலில், திண்டுக்கல் மாணவி ஆர்த்தி, 'கட் ஆப்' மதிப்பெண், 200 பெற்று முதலிடம் பிடித்துஉள்ளார்.

முதல், 10 இடங்களில், மாணவியர் எட்டு இடங்களை பிடித்துள்ளனர். 'ஆன்லைன்' முறைகோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையின்கீழ், 14 உறுப்பு மற்றும் 26 இணைப்புக் கல்லுாரிகள் உள்ளன. இக்கல்லுாரிகளில் வழங்கப்படும், 13 இளநிலை வேளாண் படிப்புகளுக்கு, 'ஆன்லைன்' முறையிலான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள், மே, 18 முதல் ஜூன், 17 வரை பெறப்பட்டன.அதன்படி, 2018 - 19ம் கல்வியாண்டு ஒதுக்கப்பட்ட, 3,422 இடங்களுக்கு, 48 ஆயிரத்து, 676 பேர் விண்ணப்பித்து இருந்தனர். கலந்தாய்வுஜூலை, 7ம் தேதி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவங்கவுள்ள நிலையில், பல்கலை துணைவேந்தர் ராமசாமி நேற்று, தரவரிசை பட்டியலை வெளியிட்டார்.

இதில், திண்டுக்கல் மாணவி ஆர்த்தி, கட் ஆப் மதிப்பெண், 200 பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.கொடுமுடி மாணவி ஸ்ரீகார்த்திகா, 199.67 பெற்று இரண்டாம் இடத்தையும், கோவை மாணவி மேகனா, 199.5 பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துஉள்ளனர். துணைவேந்தர் ராமசாமி, நிருபர்களிடம் கூறியதாவது:ஜூலை, 7ல் சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு நடக்கிறது. தொடர்ந்து, 9 முதல், 13ம் தேதி வரை முதற்கட்ட ஆன்லைன் கலந்தாய்வு நடக்கிறது. இரண்டாம் கட்ட ஆன்லைன் கலந்தாய்வு, 23 முதல், 27ம் தேதி வரை நடக்கிறது. கல்லுாரிகள் ஆக., 1ம் தேதி துவங்குகின்றன. ஆக., 31க்குள் மாணவர் சேர்க்கை முடிக்கப்படுகிறது.இவ்வாண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள, 'ஸ்லைடிங்' முறையில் தேவையான பாடப்பிரிவையும், கல்லுாரியையும் மாணவர்கள் தேர்வு செய்யலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

திட்டமிட்டு படித்ததால் வெற்றி!இரண்டாம் இடம் பிடித்த கொடுமுடியைச் சேர்ந்த மாணவி ஸ்ரீகார்த்திகா கூறுகையில், ''பள்ளியில் ஆரம்பம் முதலே நன்கு படித்தேன். வீட்டிலும், பள்ளியிலும் திட்டமிட்டு படித்ததால் நல்ல மதிப்பெண் எடுக்க முடிந்தது. இளநிலை வேளாண் படிப்பை தேர்வு செய்யவுள்ளேன்,'' என்றார்.மூன்றாம் இடம் பிடித்த கோவை மாணவி மேகனா கூறுகையில், ''நான், 'டியூஷன்' செல்லாமல் வீட்டிலும், பள்ளியிலும் நன்கு படித்தேன். குறிப்பாக பள்ளி ஆசிரியர்கள் நன்கு பயிற்றுவித்தனர். பயிற்சிக்கு கிடைத்த பலன் தான் இது. இளநிலை தோட்டக்கலை பாடத்தை தேர்வு செய்யவுள்ளேன்,'' என்றார்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post