Title of the document



அனைத்து பள்ளிகளின் கழிப்பறைகளையும், மாணவர்கள் பயன்படுத்தும் வகையில், துாய்மைப்படுத்தி, ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக பள்ளிக்கல்வித் துறையில், அமைச்சர், செங்கோட்டையன், பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். நிர்வாக சீர்திருத்தம், பள்ளிகளை தரம் உயர்த்துவது, ஆசிரியர்களின் பணி நிர்வாகத்தை சீரமைப்பது, கல்வி தரத்தை உயர்த்துவது என, பல்வேறு திட்டங்கள் அமலுக்கு வந்து உள்ளன.தற்போது, பள்ளிகளில் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், அவற்றில் சிறப்பு கவனம் செலுத்த, அமைச்சர், செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து, பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வி இயக்குனர்களுக்கு, அமைச்சர், செங்கோட்டை யன், கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.கடித விபரம்:தமிழகத்தில் உள்ள, நர்சரி, பிரைமரி பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், வளாகத்தின் துாய்மையை மேம்படுத்த வேண்டும்.



பள்ளி வளாகத்தில் குப்பை, கூளங்களை அகற்றி, சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மாணவர்களுக்கு, குடிநீர் மற்றும் பயன்பாட்டுக்கான நீர் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும்.பள்ளி வளாகத்திலுள்ள, இரு பாலின கழிப்பறைகளையும் முழுமையாக துாய்மைப்படுத்தி, மாணவர்கள் தயக்கமின்றி பயன்படுத்தும் நிலையை ஏற்படுத்த வேண்டும். இந்த நடவடிக்கையை, ஒரு வாரத்தில் முடித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post