Title of the document

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகத்தின்கீழ் தமிழகத்தில் செயல்பட்டு வரும் 7 கல்லூரிகளில் கால்நடை மருத்துவ படிப்பு, பிடெக் உணவுத்தொழில்நுட்பம், கோழி உற்பத்தி தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம் என மொத்தம் 400 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்தல் ஜூன் 11ம் தேதி(இன்று) முடிவடைகிறது

. இணையதளத்தில் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன், தலைவர், சேர்க்கைக்குழு (இளநிலை பட்டப்படிப்பு), தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகம், மாதவரம் பால்பண்ணை, சென்னை-51 என்ற முகவரியில் ஜூன் 18ம் தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

வெளிநாடு வாழ் இந்தியர், வெளிநாடு வாழ் இந்தியர்களின் குழந்தைகள்/ வெளிநாடு வாழ் இந்தியரின் நிதி பெறுவோர், வெளிநாட்டினர் பிரிவின்கீழ் www.tanuvas.ac.in என்ற இணையதளம் மூலம் ஜூலை 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post