Title of the document

இடைநிலை ஆசிரியர்கள் பணிநிரவல் குறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களை அய்யா செ மு அவர்கள் இன்று காலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு,சென்ற ஆண்டு
ஆகஸ்ட் 2017 ல் மாணவர்களின் பதிவும் வருகையும் கணக்கில் கொண்டு பணியிடக்குறைப்பு என கணக்கிட்டு இருந்தாலும் 2018 சூன் 15 அன்று பள்ளியில் ் போதிய பதிவும் வருகையும் கூடுதலாக இருந்தால் இடைநிலை ஆசிரியர்களை பணிநிரவல் செய்யத் தேவையில்லை
என கோரினார்.
அவ்வாறே செய்யக்கூறி CEO க்களுக்கு கூறியுள்ள்ளதாகவும்
.இது குறித்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் வழியாக மாவட்டக் கல்வி அலுவலர், முதன்மை கல்வி அலுவலரிடம் ஆதாரத்துடன் தலைமை ஆசிரியர்கள் நிரூபித்துக் காட்டினால் போதுமானதாகும் என்று தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் உறுதியாக தெரிவித்துள்ளார். மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கக் கூடாது என்று பொது நோக்குடன் ஏற்றுக்கொள்ள முன்வராத முதன்மை கல்வி அலுவலர்கள் மறுப்பார்களேயானால் அது தொடர்பாக உடன் தொடர்பு கொண்டால் இயக்குநர் அவர்களிடம் உடனே தொடர்பு கொண்டு சரிசெய்யப்படும் என்றும் உறுதி அளித்தார்.
எனவே கோரிக்கை வைத்தும் ஏற்க்கபாடாத நிலை குறித்து உடன் தெரிவித்தால் தன் இயக்குநர் அவர்களிடம் தெரிவித்து தீர்க்கப்படும் என செ .மு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

தகவல்.
கே.பி ரக்‌ஷித்
மாநில பொருளாளர்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post