Title of the document

பிளஸ் 2 விடைத்தாள்களில் 6 பக்கங்கள் திருத்தப்படவில்லை. சரியான விடைக்கு மதிப்பெண் அளிக்காததால் திருச்சி மாணவிகள் அலைக்கழிக்கப்பட்டனர். கடந்த மாதம் 16ம் தேதி பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியானது.

 இதனைத் தொடர்ந்து கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடந்து முடியும் தருவாயில் உள்ள நிலையில் சில மாண வர்கள் தங்களுக்கு எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காததால் தமிழகம் முழுவதும் விடைத்தாள்களை கேட்டும், மறு கூட்டலுக்கும் விண்ணப்பித்து இருந்தனர். இதேபோல் திருச்சி ஹோலிகிராஸ் பள்ளியில் பயின்ற திருவெறும்பூரை சேர்ந்த திவ்யா, தனலட்சுமி சீனிவாசன் பள்ளியில் பயின்றி ஹர்ஷனி ஆகியோர் விடைத்தாள்கள் கேட்டு விண்ணப்பித்து இருந்தனர். இருவருக்கும் விடைத்தாள்களின் நகல்கள் கொடுக்கப்பட்ட நிலையில், இதனை ஆய்வு செய்த இருவரும் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

திவ்யா விண்ணப்பித்து பெற்ற கணிதவியல் விடைத்தாள்களில் 6 பக்கங்கள் முற்றிலும் திருத்தப்படாமல் இருந்தது. இதன் காரணமாக அவருக்கு 40  மதிப்பெண்கள் கிடைக்காமல் போனது. இதேபோல் ஹர்ஷனி விண்ணப்பித்து பெற்ற கணிதம் விடைத்தாளில் சரியாக எழுதப்பட்ட இரண்டு பக்கம் விடை தவறு என்று திருத்தப்பட்டு இருந்தது. இதனால் அவருக்கு 6 மதிப்பெண்கள் குறைந்து போய் விட்டது. இது விடை வழிகாட்டி  (ஆன்சர் கைடு)டன் ஒப்பிட்டு உறுதி செய்யப்பட்டது.

187 மதிப் பெண்கள் எடுத்த நிலையில் இந்த 6 மதிப்பெண்கள் கிடைத்திருந்தால் அவருக்கு இன்ஜினியரிங் கட்ஆப் மார்க்கில் 3 மதிப்பெண்கள் கூடுதலாக கிடைத்து எளிதாக இடம் கிடைத்திருக்கும்.  மேலும் இந்த 6 மதிப்பெண்கள் கிடைக்காததால் சட்டப்படிப்பு சேர்க்கையும் சிக்கலாகி உள்ளது. இதையடுத்து இருவரும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது அரசு தேர்வு இயக்குனர் அலுவலகத்திற்கு சென்று முறையிட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால் அரசு தேர்வு மண்டல துணை இயக்குனர் அலுவல கத்திற்கு இருவரும் சென்று கேட்டபோது நாட்கள் முடிந்து விட்டதாகவும், சென்னைக்கு சென்று தலைமை அலுவலகத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். இதனால் செய்வதறியாது இரு மாணவிகளும் கண்ணீருடன் சென்றனர்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post