Title of the document


எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை எழுதியோர் தங்களின் விண்ணப்பங்களில் ஏதேனும் தவறுகள் இழைத்திருந்தால் அதனைத் திருத்திக் கொள்ளலாம் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் ஆயுஷ் படிப்புகளுக்கு 2018}19}ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 6}ஆம்தேதி நடைபெற்றது.நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் விண்ணப்பித்திருந்த 13.26 லட்சம் மாணவர்களில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் தேர்வை எழுதினர். தேர்வு முடிவுகள் ஜூன்5}ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் திருத்தம் குறித்த அறிவிப்பை சிபிஎஸ்இ செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களுடைய பிறந்த தேதி, இடஒதுக்கீட்டுப் பிரிவு, மாற்றுத்திறனாளி நிலை போன்ற விண்ணப்பத் தகவல்களில் திருத்தம் இருந்தால் அதனை மேற்கொள்ளலாம்.

மே 15}ஆம் தேதி முதல் மே 18}ஆம் தேதி மாலை 5 மணி வரை திருத்தங்களை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் திருத்தங்களை மேற்கொள்ளாம்.தேர்வு முடிவுகள் வெளியிட்ட பின்னர் எந்த திருத்தமும் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post