Title of the document

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் ஏப்ரல், மே மற்றும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெற்ற பருவத் தேர்வுகளின் தேர்ச்சி விகிதம் வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல், மே பருவத் தேர்வுவில் 98 சதவீத தேர்ச்சியுடன் நெல்லை அண்ணா பல்கலைக்கழகம் முதலிடத்தை பிடித்துள்ளது. மொத்தமுள்ள 505 கல்லூரிகளில் 77 கல்லூரிகளில் 30 % குறைவாக தேர்ச்சியை பெற்றுள்ளது. அவற்றுள் 8 கல்லூரிகளின் தேர்ச்சி விகிதம் 10 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. 

நவம்பர்- டிசம்பர் மாதங்களில் நடைபெற்ற பருவத்தேர்வில் 86.7 % தேர்ச்சியுடன் கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி முதல் இடத்தை பிடித்துள்ளது. மொத்தமுள்ள கல்லூரிகளில் 247 கல்லூரிகளின் தேர்ச்சி விகிதம் 30 சதவீதத்துக்கும் கீழ் உள்ளது. இதில் 65 கல்லூரிகளின் தேர்ச்சி விகிதம் 10 சதவீதத்துக்கும்  குறைவாக உள்ளது. மேலும் 3 கல்லூரிகளில் 1% தேர்ச்சி கூட இல்லை எனப்து குறிப்பிடத்தக்கது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post