சென்னை பல்கலை தேர்வு அறிவிப்பு

சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வி தேர்வு, வரும், 26ல் துவங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புக்கான தேர்வுகள், வரும், 26ல் துவங்க உள்ளன

சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை களில் மட்டும், தேர்வு நடக்கும். டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புக்கு, ஜூன், 4ல் தேர்வு துவங்குகிறது. சென்னை மையத்தில், தினமும் இந்த தேர்வுகள் நடக்கும்.தேர்வுக்கான கால அட்டவணை மற்றும் ஹால் டிக்கெட்டை,www.ideunom.ac.in என்ற, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என, பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது

Popular Posts