Title of the document

மனிதவளத்தை மேம்படுத்தக் குழந்தைகளுக்கென பிரத்தியேக கல்வி முறை

தற்போதைய நடுத்தர கல்வி நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி, கல்வியைப் புரிந்து, அதனைப் பயன்படுத்தும் முறையில் கவனம் செலுத்துவதற்காகத் தேசிய அளவிலான குழந்தைகளுக்கான கனவு என புதிய இயக்கைத்தை கிறிசாலிஸ் துவக்கியுள்ளது.

கல்வி முறையைச் சீரமைக்கும் முயற்சியில் ஈட்டுப்பட்டிருக்கும் முன்னணி நிறுவனங்களுள் ஒன்று கிறிசாலிஸ்.

ஒவ்வொரு குழந்தைகளிடமும் உள்ள மனித சக்தியை வெளிக் கொண்டு வரும் புதிய கல்வி முறையை தற்போது அறிமுகப்படுத்தி இருக்கிறது.

செய்யும் வேலைக்கு ஏற்ப கல்வி அறிவை வழங்கி மாணவர்களைக் குழந்தை பருவம் முதலே தயார்படுத்துவதே இதன் நோக்கம்.

இந்தக் கல்வி முறைக்கு 1420 பள்ளி தலைவர்கள், 800 பெற்றோர்கள், 350 ஆசிரியர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

கிறிசாலிஸ் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் சித்ரா ரவி இது குறித்து கூறுகையில், “ஒவ்வொரு குழந்தையிடமும் உள்ள அசாதாரண திறமைகளை வெளிக் கொணர நாடு முழுவதும் 15 ஆயிரம் பள்ளிகள் உள்ளன, ஆனால் அவை குழந்தைகள் மீது கவனத்தை செலுத்துவதை விட, கல்வி முறையில் அதிகம் கவனம் செலுத்தினால் அடுத்த தலைமுறைக்கான கல்வியை நாம் இழக்காமல் இருப்போம்.

குழந்தை பருவம் முதலே அவர்களை வேலைக்குத் தயார் படுத்தும் கல்வி முறையை விட ஒவ்வொரு குழந்தைகளிடமும் உள்ள திறமையை வெளிக் கொண்டு வர முயற்சிப்பதே சிறந்தது.

தொழிற்சாலைகளுக்காகக் குழந்தைகளை தயார் செய்வதை விட, நல்ல மனிதனை உருவாக்கக் கனவு காண வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

கிறிசாலிஸ் கடந்த 16 ஆண்டுகளாகக் கல்வி மற்றும் கள ஆய்வுகளில் ஈடுபட்டு, ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தை வரையறுத்து இருக்கிறது.

சமூக அக்கறையோடு, உணர்வுப்பூர்வமான சிந்தனையோடு கல்வி முறையை உருவாக்க வேண்டும் என்பதே இவர்களது நோக்கம். 75 சதவீதம் குழந்தைகள் வகுப்பறையில் தங்களது நேரத்தைச் செலவிடுகிறார்கள்.

கேஜி முதல் 6ம் வகுப்பு வரை ஒவ்வொரு குழந்தையும் எந்தப் பள்ளியில் படித்தாலும் ஒரே மாதிரியான கல்வியை பெறும் வகையில் இந்தத் திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கல்வி முறை இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு குழந்தையையும் சென்றடைய பல்வேறு ஊடக வாயிலான மாதிரி கல்வியையும் கிறிசாலிஸ் ஏற்படுத்தியுள்ளது.

‘திங்க் ரூம்’ என்ற இந்தக் கல்வி திட்டத்தைத் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பெற்றோர்கள் பெறத் தயார் நிலையில் உள்ளது.

இந்தக் கல்வி முறை குறித்த மேலும் விபரங்களுக்கு www.dream.chrysalis.world என்கிற கிறிசாலிஸின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்கவும்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post