இன்று, 'டான்செட்' நுழைவு தேர்வு


சென்னை: இன்ஜினியரிங் மற்றும் மற்ற பட்டப் படிப்பு முடித்த பட்டதாரிகள், எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., - எம்.பிளான் - எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., படிப்புகளில் சேர, அண்ணா பல்கலை நடத்தும், 'டான்செட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான, டான்செட் நுழைவு தேர்வு, இன்று(மே 19)தமிழகம் முழுவதும், 27 மையங்களில் நடக்கிறது.

இதில், எம்.பி.ஏ., படிப்புக்கு, 17 ஆயிரத்து, 913 பேரும், எம்.இ., - எம்.டெக்., உள்ளிட்ட படிப்புகளுக்கு, 15 ஆயிரத்து, 242 பேரும் பங்கேற்கின்றனர். எம்.சி.ஏ., படிப்புக்கு, நாளை தேர்வு நடக்கிறது. இதில், 5,240 பேர் பங்கேற்கின்றனர்.

Popular Posts