'ஓய்வூதியம் பெறுவதற்கு ஆதார் அவசியம் இல்லை'

''மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவதற்கு, ஆதார் அடையாள எண் அவசியம் இல்லை,'' என, மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர், ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
தன்னார்வ ஏஜன்சிகளுக்கான நிலைக்குழு கூட்டத்தில், அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, ஜிதேந்திர சிங்நேற்று பேசியதாவது:மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவதற்கு, ஆதார் அவசியம் கிடையாது. உயிருடன் இருப்பதற்கான சான்றிதழை, வங்கிகளை அணுகாமல்சமர்ப்பிப்பதற்கான தொழில் நுட்பத்தை செயல்படுத்த, ஆதார், கூடுதல் அம்சமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

ஆதார் இல்லாததால், சில ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியத்தை பெறுவதில் சிரமம் இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், அமைச்சரின் பதில், முக்கியத்துவம் வாய்ந்ததாககருதப்படுகிறது.

Popular Posts