அதிக கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து : 'FEES' விபரத்தை பள்ளிகளில் ஒட்ட உத்தரவு

தனியார் பள்ளிகளில், கல்வி கட்டண விபரத்தை, பள்ளி அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும். ''அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, அதிகமாக வசூலிக்கும் பள்ளிகள் மீது, அங்கீகாரம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்,'' என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்

தனியார் பள்ளிகளில், அதிக கட்டணம் வசூலிப்பதாக, பெற்றோர் புகார் அளித்தால், அந்த பள்ளிகளின் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

தனியார் பள்ளிகளின் அறிவிப்பு பலகையில், அரசு நிர்ணயித்துள்ள கட்டண விபர பட்டியலை ஒட்ட வேண்டும்

அதிக கட்டணம் வாங்கினால், அந்த பள்ளிக்கான தடையில்லா சான்றிதழ் ரத்து மற்றும் அங்கீகாரம் ரத்து போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்

Popular Posts