பள்ளி மாணவர்கள் சீருடை : பெற்றோர் குழப்பம்

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 1ல் மீண்டும் துவங்க உள்ளன

அரசு, உதவிபெறும் பள்ளிகளில் 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு சீருடைகள் வண்ணமும், அமைப்பும் மாற்றப்பட்டுள்ளன

ஆனால் 1முதல் 8 வரை படிக்கும் மாணவர்களின் சீருடை குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. இதனால் அவர்களின் பெற்றோர் குழப்பத்தில் உள்ளனர்

அவர்கள் கூறுகையில், 'சீருடை வண்ணம் குறித்து கல்வி அதிகாரிகளுக்கு முறையான தகவல் இல்லாததால் எங்களிடம் தெளிவாக கூற முடியவில்லை. புதிய சீருடை வாங்குவதில் குழப்பம் நீடிக்கிறது,' என்றனர்

Popular Posts