Title of the document

ராஜஸ்தான் மாநிலத்தில் 8 ம் வகுப்பு பள்ளி பாடபுத்தகத்தில் பால கங்காதர திலகர் பயங்கரவாதத்தின் தந்தை என குறிப்பிடப்பட்டுள்ள தகவல் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மேல்நிலை கல்வி 8 ம் வகுப்பு சமூக அறிவியல் ஆங்கில வழிக்கல்வி புத்தகத்தில், "திலகர், தேசிய இயக்கத்திற்கான பாதையை ஏற்படுத்திக் கொடுத்ததால் அவர் பயங்கரவாதத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

திலகர் பற்றிய இந்த சர்ச்சை வாசகம் தொடர்பாக தனியார் பள்ளி கழக இயக்குனர் கைலாஷ் சர்மா கூறுகையில், திலகரை பயங்கரவாதத்தின் தந்தை என குறிப்பிட்டுள்ளது கண்டனத்திற்குரியது.

பாட புத்தகங்களில் இடம்பெறும் வாசகங்களை எழுதுவதற்கோ அல்லது தயார் செய்வதற்கு முன்போ இத்தகைய சர்ச்சைக்குரிய வாசகங்களை மாற்ற வேண்டும்.

வரலாற்றாளர்களிடம் முதலில் கலந்து ஆலோசித்த பிறகு பள்ளி புத்தகங்களை அச்சிட வேண்டும் என்றார்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post