மின் வாரிய உதவி பொறியாளர் பணி - Kalvi news

Home Top Ad

Post Top Ad

Thursday, 10 May 2018

மின் வாரிய உதவி பொறியாளர் பணி

மின் வாரியம், 25 உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வை, ஆகஸ்ட் மாதம் நடத்த உள்ளது. தமிழ்நாடு மின் வாரியத்தில், உதவி பொறியாளர் உட்பட, 50 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. 
இதனால், ஒருவரே, பல வேலைகளை செய்ய வேண்டியுள்ளது.இதையடுத்து, எலக்ட்ரிகல் பிரிவில், 300; சிவில் பிரிவில், 25 என, மொத்தம், 325 உதவி பொறியாளர் பணியிடங்களை, முதன்முறையாக, எழுத்து தேர்வு வாயிலாக நிரப்புவதற்கான அறிவிப்பை, பிப்., 14ல் வாரியம் வெளியிட்டது. இதற்கு, 81 ஆயிரம் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: அண்ணா பல்கலை வாயிலாக, எழுத்து தேர்வு நடத்தப்பட உள்ளது. அண்ணா பல்கலையில், இன்ஜி., படிப்புக்கான கவுன்சிலிங் விரைவில் நடக்க உள்ளது. இதனால், உதவி பொறியாளர் எழுத்து தேர்வை, ஆகஸ்டில் நடத்தித் தருவதாக, அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது. தேர்விற்கான பாடத்திட்டம், மின் வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. எனவே, வேலைக்காக, யாரிடமும் பணம் கொடுத்து ஏமாறாமல், 2 மாதங்கள் கஷ்டப்பட்டு படித்தால், தேர்வில், அதிக மதிப்பெண் எடுத்து, உதவி பொறியாளர் பணிக்கு தேர்வாகலாம்.இவ்வாறு அவர் கூறினார்

Post Bottom Ad