Title of the document

'பணியாளர் ஊதியம் தொடர்பாக, அமைச்சர் ஜெயகுமார் வெளியிட்ட அறிக்கையில், பணியாளர் ஊதியம் தொடர்பாக, தவறான தகவல்கள் இடம் பெற்றுள்ளன'என, சென்னை தலைமை செயலக சங்கத் தலைவர், பீட்டர் அந்தோணிசாமி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:

அமைச்சர் ஜெயகுமார், நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், தலைமைச் செயலக பணியாளர்கள், ஆசிரியர்கள், அரசு அமைச்சுப் பணியாளர்கள், ஊதியப் பட்டியல் இடம் பெற்றுள்ளது.அதில் இடம் பெற்றுள்ள ஊதியம், சராசரி ஊதியம் என, குறிப்பிடப்பட்டுள்ளது. சராசரி ஊதியத்தை, ஒரே பதவியில், 20 - 25 ஆண்டுகள் பணியாற்றினால் தான் பெற முடியும்.தலைமைச் செயலகப் பணியாளர்களின், உண்மையான ஊதியத்திற்கும், அமைச்சர் தெரிவித்துள்ள ஊதியத்துக்கும் இடையே, பெரும் வேறுபாடு உள்ளது.

அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல், உண்மைக்கு மாறானது.தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் உதவியாளர்,ஒன்பதாம் நிலை, 21,400 ரூபாய் ஊதியம் பெறும் நிலையில், அமைச்சர், 47,873 ரூபாய் பெறுவதாக குறிப்பிட்டுள்ளார்.

அதுபோல், உதவி பிரிவு அலுவலர் பெறும் சம்பளம், 38,948 ரூபாயை, 83,085 ரூபாய் எனக் குறிப்பிட்டுள்ளார்.அதேபோல், இணைச் செயலர் பெறும் சம்பளம், 1.32 லட்சம் ரூபாயை, 1.80 லட்சம் ரூபாய் என்றும், கூடுதல் செயலர் பெறும் சம்பளம், 1.33 லட்சத்தை, 1.81 லட்சம் ரூபாய் என்றும் குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post