அரிய தபால் தலை சேகரித்தால் ரூ.8,000 கல்வி உதவித்தொகை - Kalvi news

Home Top Ad

Post Top Ad

Friday, 18 May 2018

அரிய தபால் தலை சேகரித்தால் ரூ.8,000 கல்வி உதவித்தொகைதமிழகத்தில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், அரிய வகை தபால் தலைகளை சேகரித்தால், அவர்களுக்கு ௮,௦௦௦ ரூபாய் கல்வி உதவித்தொகையை, மத்திய அரசு வழங்குகிறது.

இதுதொடர்பாக, தபால் துறை அதிகாரிகள் கூறியதாவது:மத்திய அரசு சார்பில், தபால் துறை மூலமாக, 'தீன்தயாள் ஸ்பார்ஸ் யோஜனா ஸ்காலர்ஷிப்' என்ற திட்டத்தின் கீழ், 2018- - 19 கல்வியாண்டு முதல், அரிய வகை தபால் தலைகளை சேகரிக்கும் பள்ளி மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

அதன்படி, தமிழகத்தில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என்று அனைத்து பள்ளிகளைச் சேர்ந்த, ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், அரிய வகை தபால் தலைகளை சேகரித்து, தபால் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.

 அத்துடன், மாணவர்களுக்கு பொது அறிவு தொடர்பான எழுத்துத் தேர்வும் நடத்தப்படும். இதில், தபால் தலைகள் சேகரிக்க 25 மதிப்பெண்கள், பொது அறிவு தேர்வுக்கு 25 மதிப்பெண்கள் என, 50 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

ஒவ்வொரு வகுப்புக்கும் சிறந்த 10 மாணவர்களள் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு, 40 மாணவர்களுக்கு தலா 8,௦௦௦ ரூபாய் வீதம் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும். இதற்கான தேர்வு, தபால் துறை மூலம் நடத்தப்படும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Post Bottom Ad