31 ஆண்டுகளாக தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சி

பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளி, 31 ஆண்டுகளாக, தொடர்ந்து, 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது.

சென்னை, மடிப்பாக்கம் மற்றும் நங்கநல்லுார் பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளிகளில் படித்த, 442 பள்ளி மாணவர்கள், பிளஸ் 2 பொது தேர்வு எழுதினர்.

இதில், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். இந்த பள்ளிகள், 31 ஆண்டுகளாக, தொடர்ந்து, 100 சதவீத தேர்ச்சியை பெற்று வருகின்றன.

 மடிப்பாக்கம், பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் படித்த, 88 மாணவர்கள், 1,100க்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்; 110 மாணவர்கள், 1000க்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.மேலும், கணக்கு பதிவியலில், 38; வணிகவியலில், 11; கணித பாடத்தில், 10 பேர் உட்பட, 70 மாணவர்கள், 200க்கு, 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

அதேபோல், நங்கல்லுார் பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் படித்த, 40 மாணவர்கள், 1,100க்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். 71 மாணவர்கள், 1,000க்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

மேலும், கணக்கு பதிவியலில், 14; வணிவியலில், நான்கு பேர் என, 23 மாணவர்கள், 200க்கு, 200 மதிப்பெண் பெற்றுள்னர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, கல்வி குழும தலைவர் வாசுதேவன், மடிப்பாக்கம் பள்ளியின் முதல்வர் லதா, நங்கநல்லுார் பள்ளியின் முதல்வர் சைலஜா ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Popular Posts

 

Most Reading

Follow by Email