பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைவு - தலைமை ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் விழுப்புரம்:


விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட குறைந்து உள்ளது. தரவரிசை பட்டியலில் விழுப்புரம் மாவட்டம் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இது பற்றி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முனுசாமியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் 60 சதவீதத்துக்கும் குறைந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது.

வரும் கல்வியாண்டில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் திடீர் ஆய்வுகள் நடத்தப்பட்டு கல்வி சார்ந்த செயல்பாடுகள் குறித்து ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் ஆகியோரிடம் கேட்டறிந்து தகுந்த அறிவுரைகளும், மாணவர் களின் தேர்ச்சியை அதிகரிக்க தகுந்த ஆலோசனைகளும் வழங்கப்படும். அதுபோல் மாதந்தோறும் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டமும் நடத்தப்பட்டு உரிய ஆலோசனை வழங்கப்படும்.

மேலும் பள்ளிகளில் தினமும் காலை, மாலை வேளைகளில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்படும். வாரந்தோறும் ஒவ்வொரு பாடம் முடிந்ததும் மாணவ-மாணவிகளுக்கு குறுந்தேர்வுகள் நடத்தப்படும்.

இதுதவிர மாதந்தோறும் பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடத்தி மாணவர்களின் செயல்பாடுகள் மற்றும் கல்வித்தரத்தை மேம்படுத்துவது தொடர்பாக அறிவுரைகள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Popular Posts

 

Most Reading

Follow by Email