ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு குறித்து 28ம் தேதி பேச்சுவார்த்தை!!!

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய
முரண்பாடு தொடர்பாக வருகிற 28ம் தேதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைக்கப்பட்டுள்ளனர்.

ஊதிய முரண்பாடுகளை களைய நிதித்துறையில் அரசு செயலாளராக உள்ள (செலவினம்) எம்.ஏ.சித்திக் தலைமையில் தமிழக அரசினால் ஒரு நபர் குழு மே முதல் வாரம் அமைக்கப்பட்டது.

இதை தொடர்ந்து அரசு ஊழியர் சங்கம் மற்றும் ஆசிரியர்கள் சங்கம், ஓய்வூதியதாரர்கள் சங்கம் சார்பில் இந்த குழுவிடம் மனு அளித்துள்ளனர். மனுவை பெற்றுக் கொண்ட குழுவினர், மே 28ம் தேதி (நாளை மறுதினம்) காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் சந்திக்க வரும்படி அனைத்து சங்கங்களுக்கும் தனித்தனியாக பதில் கடிதம் அனுப்பி வைத்துள்ளனர். அப்படி, வரும்போது சங்கம் சார்பில் 5 பேர் மட்டுமே வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Posts

 

Most Reading

Follow by Email