தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை 1.10 லட்சம் பேர் பதிவு: 28ல் குலுக்கல்


கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு, இன்றுடன் முடிவுக்கு வருகிறது.
இதுவரை, 1.10 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.தமிழக அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, சிறுபான்மையற்ற சுயநிதி பள்ளிகளில், எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்பில், 25 சதவீத இடங்களில், கல்வி கட்டணமின்றி மாணவர்களை சேர்க்க வேண்டும்.இந்த திட்டத்தில், வரும் கல்வி ஆண்டுக்கான, மாணவர் சேர்க்கையை, மெட்ரிக் பள்ளி இயக்குனர் கண்ணப்பன், ஏப்., மாதம் அறிவித்தார்.பள்ளிக்கல்வி துறையின்,www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில், ஏப்., 20 முதல், 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு துவங்கியது.பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையனின் அறிவுறுத்தலில், தனியார் பள்ளிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் அலுவலகம் முன், விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டன.இதனால், பெற்றோர் ஆர்வத்துடன் விண்ணப்பங்களை பதிவு செய்தனர். நேற்று மாலை வரை, 1.10 லட்சம் பேர், பதிவு செய்துள்ளனர். இன்று மாலையுடன், விண்ணப்ப பதிவு முடிகிறது.மெட்ரிக் பள்ளி இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது:இந்த ஆண்டு எதிர்பார்த்ததை விட, அதிக விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன. நாளை முதல், விண்ணப்ப பரிசீலனை துவங்கும். விண்ணப்பங்களுடன், சரியான ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளதா என, ஆய்வு செய்யப்படும்.பின், தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு, 'விண்ணப்பம் தகுதி பெற்றது' என, மொபைல் போனில், எஸ்.எம்.எஸ்., தகவல், 23ம் தேதி முதல், அனுப்பப்படும்.இறுதியாக, 25ம் தேதி, தகுதியான விண்ணப்பங்களின் பட்டியல், அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்படும். வரும், 28ம் தேதி, கல்வி, வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் பெற்றோர் முன்னிலையில், பள்ளிகளில் குலுக்கல் நடத்தப்பட்டு, இடங்கள் ஒதுக்கப்படும். இட ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு, 29ம் தேதி முதல், 31 வரை, மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.இட ஒதுக்கீடு குறித்த குலுக்கல், மே, 23ல் நடத்தப்படும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 23ல், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாவதால், 28ம் தேதிக்கு, குலுக்கல் மாற்றப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கூறினார்.

No comments:

Post a Comment

Popular Posts

 

Featured post

9, 10, +1,+2 வகுப்புகள் கணினிமயமாக்கம்"விரைவில் "கணினி ஆசிரியர் தேர்வு" செய்யப்படும் அமைச்சர் செங்கோட்டையன்.!!

9, 10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளை கணினிமயமாக்கபடுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர...

Most Reading

Follow by Email