Pages

SEARCH YOUR NEWS HERE

நான்காம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவ புதிய மற்றும் கடின வார்த்தைகள். தமிழ் வழி மற்றும் ஆங்கிலவழி மாணவர்களுக்காக (pdf file)

CLICH HERE TO DOWNLOAD PDF FILE

ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டியவைகள் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு - செயல்முறைகள் (31.05.2018

ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டியவைகள் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு - செயல்முறைகள் (31.05.2018)

துப்புரவாளர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு, ஊதியம்: ரூ.15,000- முதல் ரூ.50,000 வரை

துப்புரவாளர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு,
ஊதியம்: ரூ.15,000- முதல் ரூ.50,000 வரை

பிளஸ் 1 தேர்ச்சியில் அரசு பள்ளிகள் வீழ்ச்சி CBSE., பள்ளிகளும் திணறல்

பிளஸ் 1 தேர்ச்சியில் அரசு பள்ளிகள் வீழ்ச்சி சி.பி.எஸ்.இ., பள்ளிகளும் திணறல்
பிளஸ் 1 தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் கடுமையாக சரிந்து, கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

பிளஸ் 1 பொது தேர்வு முடிவு, நேற்று வெளியிடப்பட்டது. இதில், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் வழக்கம் போல், ஆதிக்கம் செலுத்தின. ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் இரண்டாம் இடத்திலும், தனியார் பள்ளிகள், மூன்றாம் இடமும் பெற்றன.பிளஸ் 2வில் முன்னிலைக்கு வரும், சி.பி.எஸ்.இ., பள்ளிகள், பிளஸ் 1 பொது தேர்வின் கடின வினாத்தாளுக்கு ஈடுகொடுக்க முடியாமல், நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளன. ரயில்வே பள்ளிகளும், ஓரியண்டல் என்ற பிறமொழி பள்ளிகளும், தேர்ச்சியில் முன்னிலை பெற்றுள்ளன. அரசு பள்ளிகள், பிளஸ் 1 தேர்வில் தாக்குப்பிடிக்க முடியாமல், தேர்ச்சியில், கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளன.ஆண்கள் தேர்ச்சி மோசம்பிளஸ் 1 பொது தேர்வு முடிவில், தனியார் மெட்ரிக் பள்ளிகள், தேர்ச்சியில் முதலிடம் பெற்றுள்ளன. பல்வேறு வகை பள்ளிகளில், பெண்கள் பள்ளிகள், 94.9 சதவீத தேர்ச்சியுடன், முதலிடம் பெற்றுள்ளன. ஆனால், ஆண்கள் மட்டுமே படிக்கும் பள்ளிகளில், பெண்கள் பள்ளிகளை விட, 14 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது.அதேநேரம், மாணவர் மற்றும் மாணவியர் இணைந்து படிக்கும் பள்ளிகளில், 91.6 சதவீதம் தேர்ச்சி கிடைத்துள்ளது. பாடப்பிரிவு வாரியான தேர்ச்சியிலும், அனைத்து பாடங்களிலும், 90 சதவீதத்துக்கு மேல் மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். உணவு பதப்படுத்துதல் மற்றும் ஊட்டச்சத்து தொழில்நுட்ப பாடத்தில், 99.80 சதவீத மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தாவரவியலில் சரிவுபிளஸ் 1 தேர்வில், மொழி பாடங்களை, 8.47 லட்சம் பேர் எழுதி, அதில், 95.36 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இயற்பியலில், 5.22 லட்சம் பேர் தேர்வெழுதி, 93 சதவீதம் பேரும், வேதியியலில், 5.22 லட்சம் பேர் பங்கேற்று, 92.74 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.கணிதம் மற்றும் அறிவியல் இணைந்த பாடப்பிரிவில், உயிரியல் தேர்வெழுதிய, மூன்று லட்சம் பேரில், அதிகபட்சமாக, 96.96 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அறிவியல் பிரிவில், தாவரவியல் தேர்வெழுதிய, 76 ஆயிரம் பேரில், 89 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வின்போது, தாவரவியல் வினாத்தாள் மிக கடினமாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்திருந்தனர். அதேபோல், தேர்ச்சி விகிதமும், மதிப்பெண் அளவும் குறைந்துள்ளது.கணித வினாத்தாளும் கடினமாக இருந்த நிலையில், அதில், 4.25 லட்சம் பேர் தேர்வு எழுதி, 95 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொருளியல் மற்றும் கணக்கு பதிவியல் பாடத்தில், 94 சதவீதமும், வரலாறில் மிக குறைவாக, 87 சதவீதமும் தேர்ச்சி கிடைத்துள்ளது. மனை அறிவியல் பாடத்தில் தேர்வு எழுதிய, 76 மாணவர்களும் தேர்ச்சி பெற்று, 100 சதவீத தேர்ச்சியை பதிவு செய்துள்ளனர்.

நிர்வாக ரீதியாக பள்ளிகளின் தேர்ச்சிநிர்வாகம் சதவீதம்1. மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் 98.672. ஆங்கிலோ இந்தியன் பள்ளி 98.573. சுயநிதி பள்ளிகள் 98.054. சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., பள்ளி 97.975. ஓரியண்டல் பள்ளிகள் 97.656. ரயில்வே பள்ளிகள் 96.307. பகுதி அரசு உதவி பள்ளிகள் 96.238. அரசு உதவி பள்ளிகள் 94.409. இந்து அறநிலையத்துறை 94.0610. சமூக நலத்துறை 93.8811. வனத்துறை பள்ளிகள் 90.5812. மாநகராட்சி 88.6413. கள்ளர் சீர்திருத்த துறை 88.0514. நகராட்சி பள்ளிகள் 85.7215. பழங்குடியினர் நலத்துறை 84.9316. அரசு பள்ளிகள் 83.9117. ஆதி திராவிடர் துறை 77.74

02.06.2018 சனிக்கிழமை அன்று பள்ளிகளுக்கு வேலை நாள் - CEO

நாமக்கல் மாவட்ட பள்ளிகளுக்கு 2.6.2018 சனிக்கிழமை அன்று வேலை நாள் - CEO

G.O 108 பள்ளிக்கல்வித்துறை,நாள் 28.05.2018 திருத்தம் செய்து அரசாணை வெளியீடு, மேச்சேரி கல்வி மாவட்டம் சேலம் ஊரகம் என பெயர் மாற்றம்

மேச்சேரி கல்வி மாவட்டம் சேலம் ஊரகம் என பெயர் மாற்றம்

வீடு வீடாக சென்றது வீணா? - அரசின் அறிவிப்பால் தொடக்கக்கல்வித் தலைமையாசிரியர்கள் ஆசிரியர்கள் அதிர்ச்சி...

வீடு வீடாக சென்றது வீணா? - அரசின் அறிவிப்பால் தொடக்கக்கல்வித் தலைமையாசிரியர்கள் ஆசிரியர்கள் அதிர்ச்சி...

தனியார் பள்ளிகளில் உள்ள வசதிகளை சமூகத்தில் நலிவுற்ற ஏழை எளிய  குழந்தைகளும் அனுபவிக்க வேண்டுமாம், அதனால்  அரசுப்பள்ளிக்கு வர  வேண்டியவர்களை தனியார் பள்ளியில் கொண்டுபோய் சேர்க்கனும் என்று அரசு ஆணையிட்டுள்ளது. 

அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தால்,  புதிய மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என்றால்  தலைமையாசிரியர்  மற்றும் ஆசிரியர்கள் அதற்கான காரணம் கூற வேண்டுமாம் இப்படியும் ஒரு  ஆணை..

தனியார் பள்ளியில் அரசே சேர்க்க ஆணையிடுகிறதெனில் விடுமுறை  நாட்களில் மாணவர்களை சேர்க்க வீடு வீடாக சென்று அரசு பள்ளியில் சேர்க்க  சொல்லி சேர்க்கை பேரணிகள்  பிரச்சாரங்கள் செய்வதெல்லாம் வீணா. 

தனியார்  பள்ளிகளைவிட அரசு பள்ளிகள் சிறந்து விளங்கினாலும் தனியார் பள்ளிகளைவிட  அரசு பள்ளி ஆசிரியர்கள் சிறப்பாக பணியாற்றினாலும் கற்பித்தாலும், கற்றல்  கற்பித்தல் பணிகளுக்கு சொந்த பணத்தை போட்டு சில வசதிகளை அரசை  எதிர்பாராமல் தாமே உருவாக்கிக்கொடுத்தாலும் தனியார் பள்ளிகளின் மீதுள்ள  மோகத்தால்  பணமுள்ளவர்கள் தனியார் பள்ளிகளை நாடி செல்லும் இன்றைய  காலக்கட்டத்தில் தனியார் பள்ளிகளில் பணம் செலுத்த முடியாத  பணமில்லாதவர்கள் வசதியற்றவர்கள் தான் பெரும்பாலும் அரசுப் பள்ளிகளை நாடி வருகின்றனர். 

அவ்வாறு வருபவர்களையும் இந்த அரசு தடுக்கின்ற வகையில் நீ உன் பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்த்துவிடு. உன்னிடம் பணமில்லை என்றாலும் பரவாயில்லை அரசே தனியார் பள்ளிகளுக்கு  பணத்தை செலுத்தும் என்று கூறுவது ஏற்புடையதா .எங்கேயாவது இப்படி நடக்குமா?? 

தனியார் பள்ளியில் மாணவர்கள்  சேர்ப்பதை உறுதி செய்ய வேண்டும்  என்றும் ஒரு ஆணை. அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தால், புதிதாக மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என்றால் அதற்கான காரணம் கேட்கப்படும்  என்றும் ஓர் ஆணை.. இரண்டு ஆணைகளையும் போடுவதும் ஒரே நபர்!!! என்னன்னு சொல்றது இதை..

தனியார் பள்ளிகளில் 25% மாணவர்களுக்கு அரசு செலுத்தும் பணத்தை அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு  பயன்படுத்துமேயானால்

அரசு பள்ளி நலன் பெறுமே!! தனியார் பள்ளிகளில் உள்ள வசதிகளை அரசு பள்ளிகளில் இந்த அரசால் ஏற்படுத்தி தர இயலாதா.. 

பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள பல தனியார் பள்ளிகளில் போதிய வசதிகளே இல்லாத பள்ளி. அப்பள்ளிகளைவிட கற்றல் கற்பித்தலில், நம் பள்ளி 100% உயர்வானது.  நம் பள்ளியில் அனைத்து ஆசிரியர்களும் போதிய கல்வி தகுதியோடு உள்ளவர்கள். கற்றல் கற்பித்தலில் சிறந்தவர்கள். 

ஆனால் தனியார் பள்ளிகளில் அப்படியா உள்ளது.. தனியார் பள்ளிகள் சிறந்த பள்ளிகள் என்பதற்கான அளவுகோல் எது. 10 &12ம் வகுப்பு தேர்ச்சியா.. அரசு பள்ளிகளைப்போல் தனியார் பள்ளிகளில் அடைவுத்திறன் மதிப்பீட்டு தேர்வுகள் உண்டா.. வாசித்தல் திறன் ஆய்வு உண்டா. 

அரசுப்  பள்ளிகளில் பராமரிக்கும் ஏகப்பட்ட பதிவேடுகள் அங்குண்டா.. ABL SALM ALM முறைகள் உண்டா.. இங்கிருக்கும் நடைமுறைகள் அங்கு எதுவும் இல்லாதபோது அரசு பள்ளியையும் தனியார் பள்ளியையும் ஒப்பிடுவது எவ்வாறு.. என்ன அரசோ.. என்ன ஆணையோ...

தமிழக அரசில் வேலை வேண்டுமா..? விண்ணப்பிக்க ஜூன் 29 கடைசி

தமிழக அரசில் வேலை வேண்டுமா..? விண்ணப்பிக்க ஜூன் 29 கடைசி

தமிழ்நாடு நீதித்துறையில் துறையில் காலியாக உள்ள 16 மொழிபெயர்ப்பாளர், மொழிபெயர்ப்பாளர் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முதுநிலை தமிழ், பி.எல். மூன்று அல்லது ஐந்தாண்டு படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Translator (மொழிபெயர்ப்பாளர்)
காலியிடங்கள்: 12
சம்பளம்: மாதம் ரூ.36,400 - 1,15,700
தகுதி: தமிழில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம், சட்டத்துறையில் மூன்று அல்லது ஐந்தாண்டு பி.எல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழில்  எழுத் பேச தெரிந்திருக்க வேண்டும்.

பணி: Translation Officer (மொழிபெயர்ப்பாளர் அதிகாரி)
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500
தகுதி: தமிழில் முதுகலை பட்டம், சட்டத்துறையில் மூன்று அல்லது ஐந்தாண்டு பி.எல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத் பேச தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தேர்வு கட்டணம்: ரூ.150. இதனை ஆன்லைன் மூலம் வங்கி அட்டைகள் பயன்படுத்தி செலுத்தலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:  “www.tnpsc.gov.in” என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோவை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.06.2018

விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 01.07.2018

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி:  18.08.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2018_11_Translation_Officer.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Nmms scholarship amount increased from 6000 to 12000 rupees per annum effect from april 2017

Nmms scholarship amount increased from 6000  to 12000 rupees per annum effect from april 2017

பள்ளியில் மதிய உணவுத்திட்டத்தில் எந்த தேதியில் என்ன உணவு வழங்க வேண்டும் என்ற அட்டவணை வெளியீடு

பள்ளியில் மதிய உணவுத்திட்டத்தில் எந்த தேதியில் என்ன உணவு வழங்க வேண்டும் என்ற அட்டவணை வெளியீடு

MBBS,BDS படிப்புக்கான NEET தேர்வு முடிவுகள் ஜூன் 5-ம் தேதி வெளியீடு

MBBS,BDS படிப்புக்கான NEET தேர்வு முடிவுகள் ஜூன் 5-ம் தேதி வெளியீடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நடந்த நீட் தேர்வு முடிவுகளை வரும் 5-ம் தேதி வெளியிட சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது.

நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஓமியோபதி (ஆயுஷ்) படிப்புகளுக்கு 2018-19-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ( நீட்) கடந்த 6-ம் தேதி நடந்தது.

மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்திய நீட் தேர்வை, இதற்கு விண்ணப்பித்திருந்த 13 லட்சத்து 26 ஆயிரத்து 775 மாணவர்களில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்.
தமிழகத்தில் மட்டும் சுமார் 1 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்றனர்.

தமிழ், ஆங்கிலம், உட்பட மொத்தம் 11 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகளை வரும் வரும் 5-ம் தேதி www.cbseneet.nic.in இணையதளத்தில் வெளி யிட சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது.

கோடை விடுமுறை முடிவு: பள்ளி மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

கோடை விடுமுறை முடிவு: பள்ளி மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

கோடை விடுமுறைக்குப் பிறகு தமிழகம் முழுவதும் அரசு, தனியார் பள்ளிகள் வெள்ளிக்கிழமை திறக்கப்படவுள்ளன.

தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்து வரையிலான வகுப்புகளுக்கு, மே மாதம் மட்டுமே விடுமுறை விடப்படும். ஆனால், இந்த ஆண்டு முதல், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளைப் போன்றே ஏப்ரல் மூன்றாவது வாரம் முதல் விடுமுறை அளிக்கப்பட்டது.

கோடை விடுமுறை வியாழக்கிழமை முடிவுக்கு வருகிறது. இதையடுத்து அனைத்துப் பள்ளிகளும் ஜூன் 1-ஆம் தேதி வெள்ளிக்கிழமை திறக்கப்பட உள்ளன.

இதனை முன்னிட்டு, மாணவ, மாணவியருக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மாணவர்கள் காலை 9.15 மணிக்குள் பள்ளியில் இருக்க வேண்டும்.

புதிய சீருடையுடன் நாளை பள்ளிக்கு வர வேண்டும். பிறந்தநாள் உள்ளிட்ட அனைத்து நாட்களிலும் சீருடையில்தான் பள்ளிக்கு வர வேண்டும்.

இடுப்பு தெரியும் வகையிலோ அல்லது இறுக்கமான வகையிலோ சீருடை இருக்கக் கூடாது.

மாணவர்கள் சட்டையை இன் செய்திருக்க வேண்டும். இன் செய்ய வசதியாக சீருடை தைக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட சில முக்கிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கோடை விடுமுறைக் காலத்தைப் பயன்படுத்தி, பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்ய வேண்டும். வாகனங்களை சரியாக பராமரிக்க வேண்டும் என ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.

கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் கல்வித்துறை அதிகாரிகளும், போக்குவரத்து அதிகாரிகளும் பள்ளிகளில் ஆய்வு நடத்தினர்.

இதையடுத்து சரியாகப் பராமரிக்கப்படாத வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. அடிப்படை வசதி மற்றும் அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன.

அதேவேளையில் பள்ளிகள் வெள்ளிக்கிழமை திறக்கப்படுவதால் அதற்கான முன்னேற்பாடுகளை கல்வித்துறை அதிகாரிகளும், ஆசிரியர்களும் செய்து வருகின்றனர்.

பள்ளிகள் திறந்த முதல் நாளிலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசப் பாடநூல்கள், சீருடைகள் வழங்கப்படவுள்ளன. இந்த ஆண்டு முதல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, சீருடைகளின் நிறம் மாற்றப்பட்டுள்ளது.

பள்ளி திறக்கும் நாளிலேயே பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் தேதிகளும், தேர்வு முடிவு வெளியாகும் தேதியும் அறிவிக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.

TET passed BT Teacher Wanted (permanent job) - Govt Aided School

பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி எகிறியது எப்படி?

பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி எகிறியது எப்படி?

பிளஸ் 1 தேர்வில், வினாக்கள் மிக கடினம் என, மாணவர்கள் புலம்பிய நிலையில், 'ஜீ பூம்பா' மந்திரம்போல்,தேர்ச்சி விகிதம், பிளஸ் 2வை விட அதிகரித்துள்ளது.

தமிழக பாடத்திட்ட மாணவர்கள்,தேசிய அளவிலான போட்டி தேர்வு களில் தேர்ச்சி பெற முடியவில்லை என்ற குற்றச்சாட்டு, நீண்ட காலமாக உள்ளது.இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மாணவர்களை தயார்படுத்த, பிளஸ் 1 வகுப்புக்கும்,பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு, முதல் முறையாக நடந்த பொது தேர்வில்,வினாத்தாளில் பல்வேறு கிடுக்கிப்பிடி கேள்விகள் இடம்பெற்றன. ஐ.ஐ.டி., நடத்தும்,ஜே.இ.இ., மற்றும் மருத்துவ கவுன்சில் நடத்தும், 'நீட்' போன்ற நுழைவு தேர்வுகள் போன்று, பிளஸ் 1பொது தேர்வில், வினாக்கள் கேட்கப்பட்டன.

அதனால், பெரும்பாலான மாணவர்கள், பதில் எழுத திணறினர்.வினாக்கள் கடினமாக இருந்ததாக, பெற்றோரும்,ஆசிரியர்களும் கவலை தெரிவித்தனர். அதனால், சலுகை மதிப்பெண் தேவை என்றும்,கோரிக்கை எழுந்தது. ஆனால்,தேர்வுத் துறை, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்நிலையில்,மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில், பிளஸ் 1 தேர்வில், 91.3 சதவீத மாணவர்கள், தேர்ச்சி பெற்றுள்ளனர்.இது, எப்படி நிகழ்ந்தது என, ஆசிரியர்களும் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.

40 சதவீதத்துக்கும் மேல்,மாணவர்களின் தேர்ச்சி பாதிக்குமோ என, விடைத்தாள் திருத்திய ஆசிரியர்கள், அச்சத்தில் இருந்தனர். ஆனால், அனைத்துக்கும் நேர்மாறாக, தேர்ச்சி சதவீதம் உயர்ந்துள்ளது.இது குறித்து,ஆசிரியர்கள் கூறியதாவது:பிளஸ் 1தேர்வு முறையும், வினாத்தாள் முறையும் மிக கடினமாக இருந்தது. ஆனால், பள்ளிக் கல்வித் துறையின் முயற்சி, இறுதியில் மாறி விட்டதாக தெரிகிறது.வழக்கம்போல், அரசியல் ரீதியாக, தேர்ச்சி சதவீதம் காட்டப்பட்டதோ என்ற, சந்தேகம் எழுந்துள்ளது. விடை திருத்தத்தில் வராத மதிப்பெண், இறுதி பட்டியலில்,அதிகம் வந்ததுபோல் தெரிகிறது.

எனவே, மதிப்பெண்ணை பதிவு செய்வதில், 'டேட்டா என்ட்ரி' முறை பின்பற்றப்பட்டதா என்ற சந்தேகமும் எழுந்து உள்ளது.பொது தேர்வு முறையில், எத்தனை மாற்றங்கள் கொண்டு வந்தாலும், மதிப்பீடு முறையும், மதிப்பெண்ணை இறுதியாக பதிவு செய்யும் முறையும்,வெளிப்படை தன்மையுடன் நடந்தால் மட்டுமே, மாணவர்களின் சரியான கல்வித் திறன் தெரிய வரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்

பள்ளிக் கல்வித்துறைக்கு 2018-19ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 27,205.88 கோடி ஒதுக்கீடு

பள்ளிக் கல்வித்துறைக்கு 2018-19ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 27,205.88 கோடி ஒதுக்கீடு

சட்டப் பேரவையில் நேற்று பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அதற்கு பதிலளித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:

பள்ளிக் கல்வித்துறைக்கு 2018-19ம்  ஆண்டுக்கான  வரவு செலவுத் திட்டத்தில் 27,205.88 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. தேர்வு முறையில் தர வரிசை ரத்து செய்யப்பட்டதுடன், மாணவரின் செல்போனுக்கு உடனடியாக தேர்வு முடிவுகள் அனுப்பும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

3 ஆயிரம் பள்ளிகளில் 60 கோடி செலவில் ஹைடெக் ஆய்வகம் ஏற்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேரவையில் தெரிவித்தார்.

இந்த ஆண்டு முதல் இணைய தளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. ரூபாய் நோட்டுகளில் இருப்பது போல ரகசிய குறியீடுகள் கொண்ட கிழியாத வகையில் தயாரிக்கப்பட்ட மதிப்பெண் பட்டியல்கள் வழங்கப்படுகிறது.

கடந்த 14 ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருந்த பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு 1, 6, 9, பிளஸ்1 வகுப்புகளுக்கு புதிய பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு நடைமுறைக்கு வர உள்ளது. இதையடுத்து, மூன்றாண்டுகளில் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் என்ற இலக்கினை, இந்த ஆண்டிலேயே அடைவது என தீர்மானித்து பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகளைச் செம்மைப்படுத்தவும்,எளிமைப்படுத்தவும், அதன் நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு 68மாவட்ட கல்வி அலுவலகங்கள் நிர்வாக வசதிக்காக 120 மாவட்ட கல்வி அலுவலகங்களாக உயர்த்தப்பட்டுள்ளன.

நபார்டு வங்கி உதவியுடன் அறிவியல் உபகரணங்கள், கணினிகள்,அறிவியல் ஆய்வகங்கள், ஆங்கில மொழி ஆய்வகங்கள், கணித ஆய்வகங்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும்,ரூ.200 கோடி செலவில் அரசுப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள்,தளவாடங்கள், ஆய்வகங்கள்,நூலகங்கள், கழிப்பறைகள்,குடிநீர்வசதி மற்றும் சுற்றுச்சுவர் ஏற்படுத்தப்பட உள்ளன. பள்ளிகளில் தூய்மைப் பணிகள் “100 நாள் வேலை” திட்டப் பணியாளர்களைக் கொண்டு மேற்கொள்ளப்படும்.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்  நினைவைப் போற்றும் வகையில் அவரின் பெரிலேயே,  டிபிஐ வளாகத்தில் 1 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.39 கோடியே 90 லட்சம் செலவில்  ஒருங்கிணைந்த கல்வித்துறைக்கான கட்டிடம் கட்டப்படும்.

மேலும், 3090 உயர்நிலைப் பள்ளிகள் - 10 கணினிகளுடனும், 2939மேல்நிலைப் பள்ளிகளுக்கு - 20கணினிகளுடனும் கூடிய  ஹைடெக் ஆய்வகம் ஏற்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக 3000 பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு தலா 2 லட்சம் வீதம் 60கோடி செலவில் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளிகளில் உலகத்தர தொழில்நுட்பத்தோடு ரோபாடிக் பயிற்சி வகுப்புகள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் தொடங்க பரிசீலித்து வருகிறோம்.

கடந்த 2017-18ம் கல்வி ஆண்டில் 8869 பள்ளிகள் 90,889 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 32 மாவட்ட மைய நூலகங்களில் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவ,மாணவிகளுக்குப் போட்டித்தேர்வு பயிற்சி மையங்கள் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் துவங்கப்பட்டுள்ளது.

உலகப் புத்தக தினத்தை (ஏப்ரல் 23)முன்னிட்டு 24-1-2018 முதல் 15-4-2018 முடிய மாநில அளவில் ஒரு லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 2020ம் ஆண்டிற்குள் நூலகங்களில் ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். சிந்துசமவெளி நாகரிகம் உள்ளிட்ட பழம்பெரும் நாகரிகங்கள் குறித்த சிறப்பு நூலகம்   மற்றும் காட்சிக்கூடம்,  கீழடி, சிவகங்கை,தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி,நீலகிரி, திருச்சி, கோவை, சென்னை மாவட்டங்களில் அமைக்கப்படும். உலகத் தமிழ்ச் சங்கம் கண்ட மதுரையில் 6 கோடி மதிப்பில் மாபெரும் நூலகம் அமைக்க ஆவன செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்

Popular Posts

 

Most Reading

Powered by Blogger.

Sidebar One

Support

Blog Archive

Follow by Email