Title of the document

டிஎன்பிஎஸ்சி குரூப் 2-ஏ தேர்ச்சி பெற்றவர்கள், சான்றிதழ் சரிபார்ப்புக்கு அரசு இ-சேவை மையங்களில் தங்கள் அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தேர்ச்சி அடைந்தவர்கள் நேர்முகத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு போன்றவற்றுக்காக 2 அல்லது 3 முறை சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்துக்குச் செல்லும் சூழல் உள்ளது. இதனால் ஏற்படும் சிரமத்தைத் தவி்ர்க்க, அனைத்து மாவட்டங்களிலும் சான்றிதழ் சரிபார்க்க ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணி தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணயத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வில் தேர்ச்சிஅடைந்தவர்களின் சான்றிதழ்களை இ-சேவை மையத்தின் மூலம் பதிவேற்றம் செய்யலாம். இதில் முதல் கட்டமாக சான்றிதழ் பதிவேற்றம் செய்து அனுப்பும் இணையதளத்தை சென்னை மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தொடங்கி வைத்தார். மேலும் சென்னையில் உள்ள 209 இ-சேவை மையத்திலும் ஆன்லைனில் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யலாம்.குரூப் 2-ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் அசல் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு பக்கம் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய ரூ.5 மட்டும் கட்டணம் செலுத்த வேண்டும்.எனவே, தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப் 2-ஏ தேர்ச்சி பெற்றவர்கள் தங்களுக்கு அந்த அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்ட கடிதம்,தங்கள் வசம் உள்ள அனைத்து சான்றிதழ்களுடன் அருகில் உள்ள அரசு இ-சேவை மையத்தில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.இனி நடக்கும் மற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்களும் இம்முறையைப் பின்பற்றலாம்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post