Title of the document

மோடியின் புத்தாண்டு உரையில் இடம்பெற்றுள்ள சில முக்கிய அறிவிப்புகள் இவைதான் !

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்போது பல்வேறு பிரிவு மக்களுக்கும் பல சலுகைகளை அறிவித்தார்.

பிரதமர் மோடி புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தொலைகாட்சி வாயிலாக உரையாற்றினார். அப்போது பல்வேறு சலுகைகளை அறிவித்தார். அதில் முக்கியத்துவம் வாய்ந் சில அம்சங்கள்:

*மூத்த குடிமக்கள் ரூ.7.5 லட்சம் 10 ஆண்டுகளுக்கு டிபாசிட் செய்தால் 8 சதவீதம் வட்டி வழங்கப்படும்

*கர்ப்பிணி பெண்களுக்கு பேறு கால செலவுக்காக உதவும் வகையில், மத்திய அரசு சார்பில் ரூ.6000 உதவித் தொகை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும் இந்த திட்டம் நாடு முழுக்க முதல் கட்டமாக 650 மாவட்டங்களில் கொண்டு வரப்படும்.

*சிறு குறு தொழில்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும். சிறு வணிகர்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படும்.

*சொந்த வீடு கட்டுபவர்களுக்கு 9 லட்சம் ரூபாய் வரை 4 சதவீத வட்டியில் கடன் வழங்கப்படும். ரூ.12 லட்சம் வரை கடன் பெறுவோருக்கு 3% வட்டி விலக்கு அளிக்கப்படும்.

*விவசாயிகளின் குறிப்பிட்ட சில கடன்களின் 60 நாட்களுக்கான வட்டியை அரசே ஏற்கும். வங்கிக் கடன் பெற்று விதைக் கொள்முதல் செய்யப்பட்ட விவசாயிகளுக்கு 60 சதவீதம் வரிச்சலுகை அளிக்கப்படும்.

*சிறிய வர்த்தகத்திற்கான ரொக்க கடன் வரம்பு 20 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தப்படும்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post