Title of the document

IIT., NIT.,நுழைவு தேர்வு ஜன.2 வரை அவகாசம்

ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்ற உயர் கல்வி நிறுவனங்களில், இன்ஜினியரிங் படிப்பு, நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க, ஒரு வாரமே அவகாசம் உள்ளது.
ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., - தஞ்சையிலுள்ள இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், சென்னையில் உள்ள காலணிகள் தயாரிப்பு தொழில் நுட்ப கல்லுாரி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, இந்திய தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், திருச்சி என்.ஐ.டி., போன்றவற்றில் சேர, நுழைவு தேர்வில்தேர்ச்சி பெற வேண்டும்.பிளஸ் 2 முடித்த மாணவர்கள், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்தும், ஜே.இ.இ., மெயின் நுழைவு தேர்வுக்கு, டிச., 1 முதல், ஆன்லைனில் விண்ணப்பம் பெறப்படுகிறது.

 தற்போது, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஜன., 2ல், விண்ணப்ப பதிவு முடிகிறது.இந்த ஆண்டு, ஜே.இ.இ., மெயின் தேர்வுக்கு, ஆதார் எண் கட்டாயம். மேலும், பிளஸ் 2 தேர்வில், குறைந்த பட்சம், 75 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தேர்வுக்கு பின், இந்த மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே, தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post