Title of the document

தமிழக அரசு நிர்வாகத்தை,முழுமையாக மாற்றி அமைக்கும் வகையில், விரைவில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பலர் மாற் றப்பட உள்ளனர். ஊழல் நபர்களை நீக்கி, நேர்மையானவர்களை முக்கிய பொறுப்புகளில் நியமிக்க, திட்டமிடப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக, விடுமுறை நாளான நேற்று, முதல்வர் பன்னீர்செல்வம், தலைமை செயலர் கிரிஜா வைத்திய நாதன் ஆகியோர், கோட்டை யில் அவசர ஆலோசனை நடத்தினர். விடு முறை நாளான, நேற்று காலை, 10:00 மணிக்கு, புதிய தலைமை செயலர் கிரிஜா வைத்திய நாதன், தலைமை செயலகம் வந்தார்உள்துறை செயலர், சட்டத்துறை செயலர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளை அழைத்து பேசினார்.

பிற்பகலில்,முதல்வர் பன்னீர்செல்வம், தலைமை செயலகம் வந்தார். தலைமை செயல ருடன், அவசர ஆலோசனை நடத்தினார். முதல் வர் மற்றும் தலைமை செயலர் வந்த தால், மற்ற துறை அதிகாரிகளும் பணிக்கு வந்தனர். இதனால், விடுமுறை நாளிலும், கோட்டை வட்டாரம் பரபரப்பாக இயங்கியது.

முதல்வர் - தலைமை செயலர் நடத்திய ஆலோசனையில், அரசு நிர்வாகத்தை மாற்றி அமைத்து, நலத் திட்டப் பணிகளை விரைவுப் படுத்த, முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதில், முதல் கட்டமாக, ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளை, அதிரடியாகஇடமாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இது குறித்து,அதிகாரிகள் கூறியதாவது:

முக்கிய பதவிகளில் உள்ள, ஊழல் அதிகாரி களை அகற்றிவிட்டு, திறமையான, நேர்மை யான அதிகாரிகளை நியமிக்க, முதல்வர் மற்றும் தலைமை செயலர் முடிவு செய்துள் ளனர். இதற்காக, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் இடமாறுதல் பட்டியல் தயாராகி வருகிறது.

அதேபோல, ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் பதவி உயர்வுக்கான கோப்பு, நீண்ட நாட்களாக கிடப் பில் உள்ளது. அதை துாசு தட்டி, தகுதியுள்ள அதிகாரிகளுக்கு, உடனடியாக பதவி உயர்வு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், போலீஸ் துறையிலும் அதிரடி மாற்றங்கள் செய்ய, முடிவு செய்யப்பட்டு உள்ளது; அதற் கான பட்டியலும் தயாராகி வருகிறது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post