Title of the document

 ஆள் மாறாட்டத்தை தடுக்க அனைத்து மத்திய தேர்வுகளுக்கும் ஆதார் கார்டு கட்டாயம் என்று மத்திய மனித வள மேம்பாட்டு துறை மந்திரி

பிரகாஷ் ஜவடேகர் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:-

ஆதார் கார்டை பல்வேறு வி‌ஷயங்களுக்கும் பயன்படுத்தி வருகிறோம். இனி மத்திய அரசு நடத்தும் அனைத்து தேர்வுகளுக்கும் இதை அடையாள அட்டையாக பயன்படுத்தலாம் என திட்டமிட்டு இருக்கிறோம்.

இதை எப்படி செயல்படுத்துவது என்பது பற்றி ஆய்வு நடந்து வருகிறது. ஆதார் அட்டையில் புகைப்படம் மற்றும் அனைத்து விவரங்களும் இருப்பதால் இதில் ஆள் மாறாட்டம் செய்ய முடியாது. சில மாநிலங்களில் ஆள் மாறாட்டம் நடப்பதாக தொடர்ந்து புகார் வந்த வண்ணம் உள்ளன. இனியும் இப்படி நடக்க கூடாது என்பதற்காக இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். காஷ்மீர், மேகாலயா, அசாம் மாநிலங்கள் தவிர, அனைத்து மாநிலங்களிலும் அடுத்த ஆண்டு நடைபெறும் மத்திய தேர்வுகளுக்கு ஆதார் கார்டு கட்டாயமாக்கப்படும்.

சேவை திட்டங்கள் சம்பந்தமாக ஆதார் கார்டை கட்டாயமாக்க கூடாது என சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது. ஆனால், தேர்வு என்பது சேவை திட்டம் அல்ல. ஒரு அடையாள அட்டையாகத்தான் நாங்கள் ஆதார் கார்டை பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். எனவே, இது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு பொருந்தாது.

இதுவரை மத்திய தேர்வுகளை மத்திய செகன்டரி கல்வி வாரியம் நடத்தி வந்தது. இனி, தேர்வு நடத்துவதற்காகவே தேசிய தேர்வு கல்வியகம் ஒன்றை தொடங்குவதற்கு முடிவு செய்துள்ளோம். இது சம்பந்தமாக மத்திய மந்திரிசபையில் விவாதித்து முடிவு எடுக்கப்படும்.

இனி இந்த வாரியம் மூலம்தான் என்ஜினீயரிங், மருத்துவம் மற்றும் அனைத்து தேர்வுகளும் நடத்தப்படும். இவ்வாறு கூறினார்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post