SEARCH YOUR NEWS HERE

இன்றைய பரபரப்பு

🚨இன்றைய🚨பரபரப்பு🚨செய்திகள் 01/12/16 !

ஆண்கள் 100 கிராம் , திருமணம் ஆகாத பெண்கள் 250 கிராம் , திருமணமான பெண்கள் 500 கிராம் தங்கம் மட்டுமே வைத்துகொள்ள அனுமதி - தங்கம் வைத்திருக்க மத்திய அரசு கட்டுப்பாடு.

நடா புயல் வலுவிழந்தது புதுச்சேரி அருகே 210 கிமீ தொலைவில் தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது தமிழகம்,புதுவையில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த மத்திய அரசு அனுமதி தந்தது.

ஜியோ சிம் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை டிசம்பர் 4 முதல் மார்ச் 31ம் தேதி வரை டேட்டா , வாய்ஸ் கால் , வீடியோ கால் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இலவசமாக வழங்கப்படும் - முகேஷ் அம்பானி.

கருணாநிதி உடல்நிலை நன்றாக உள்ளது.
ஓரிரு தினங்களில் வீடு திரும்புவார் - முக.ஸ்டாலின்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை பார்க்க பார்வையாளர்கள் வர வேண்டாம் - திமுக.

பாதுகாப்பு முகாமில் தேவையான உணவுப் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்றும் புயல் , மழை குறித்த தெரிந்து கொள்ள ஊடகங்களை மக்கள் கவனிக்க வேண்டும் புயல் குறித்த வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் -  தமிழக வருவாய் துறை செயலாளர் சந்திரமோகன்

ரூ.85 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட வேந்தர் மூவிஸ் மதன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நீதிபதி பிரகாஷ் முன்னிலையில் மதன் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

பாபர் மசூதி இடிப்பு (டிசம்பர்-6) தினத்தையொட்டி சென்டிரல், எழும்பூர்,மற்றும்  கடற்கரை ரெயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளன.

துறையூர் வெடி விபத்து நடந்த ஆலை 24 மணி நேரத்தில் மூடி சீல் வைக்கப்படும் - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய மக்களிடம் உறுதி அளித்துள்ளார். 

நாகை துறைமுகத்தில் 5ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

நடா புயல்காரணமாக தமிழக விசைப்படகு இலங்கையில் கரை ஒதுங்கியுள்ளது. கடல் சீற்றம் காரணமாக அதிலுள்ள மீனவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து ராகுல்காந்தி  கேட்டறிந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலைநகர் ரயில் நிலையம் அருகே தனியார் நிறுவன ஊழியர் கார்த்திக்-38 மின்சார ரயில் முன் பாய்ந்து தற்கொலை உடலை கைபற்றி ரயில்வே போலீசார் விசாரணை.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லக்கண்ணுவின் மனைவி ரஞ்சிதம் அம்மாள் (85) மறைவு.

சென்னையில் முற்போக்கு கவிஞர் இன்குலாப் காலமானார்.

கடலூரில் நாளை கல்லூரிகளுக்கு விடுமுறை.