Title of the document


பி.இ படித்தவர்களுக்கு பி.எட் படிக்க அரசு அனுமதித்திருப்பதுமேலும் வேலையில்லா பட்டதாரிகளை அதிகரிக்கும் என வேலையில்லா பட்டதாரிஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
பெரம்பலூர் துறைமங்கலத்தில் தமிழ்நாடு பி.எட், கணினி அறிவியல் வேலையில்லாபட்டதாரி  ஆசிரியர்கள் சங்கத்தின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பெரம்பலூரில்நடைபெற்றது.

1992-ம் ஆண்டு  முதல் தற்போது வரை சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டபட்டதாரிகள் கணினி அறிவியல் பி.எட். முடித்துள்ளதாகவும், அதற்கு அரசு முறையாகஅங்கீகாரம் வழங்கவில்லை என்றும், தமிழக அரசு நடத்தும் எந்தொரு ஆசிரியர்நியமனத் தேர்விலும், கணினி அறிவியல் பி.எட். படித்தவர்களுக்கு தேர்வுகள்எழுதும் வாய்ப்புகள் இல்லை என்றும் தெரிவித்தனர்.மேலும் இதே போன்று டி.இ.டி, டி.ஆர்.பி போன்ற தேர்வுகளிலும்புறக்கணிக்கப்படுவதை அரசு நிறுத்த வேண்டும்.உதவி தொடக்க கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பி.எட் படிப்பு தகுதிஎன்று நிர்ணயிக்கப்பட்டு உள்ள நிலையில் கணினி ஆசிரியர்களை இதிலும்புறக்கணிப்பு செய்கின்றனர்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிற பாடப்பிரிவுகளுக்கு இணையாககணினி அறிவியலும் இடம் பெற்றுள்ளது. ஆனால் அதற்கான ஆசிரியர்கள் நியமனம்செய்யப்படாமல் காலியாக உள்ளது.சுமார் 40 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வேலையில்லாமல் உள்ள நிலையில் பி.இபடித்தவர்களுக்கு பி.எட் படிக்க அரசு அனுமதித்திருப்பது மேலும் வேலையில்லாபட்டதாரிகளை அதிகரிக்கும் வாய்ப்பாகவே  அமையும் என கூட்டத்தில்தெரிவிக்கப்பட்டது.கடந்த நவ.11-ம் தேதி மாவட்ட கல்வி அலுவலர்களிடம் காலிப்பணியிடம் குறித்துஅறிக்கை கோரப்பட்டுள்ளது. எனவே வறுமையில் வாடும் தங்களுக்கு வேலை வாய்ப்பைவழங்க வேண்டுமென வேலையில்லா பட்டதாரிகள் ஆசிரியர் சங்கத்தினர் அரசுக்குகோரிக்கை விடுத்துள்ளனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post