Title of the document


கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக கடந்த மாதம் 8-ம் தேதி மத்திய அரசு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து இந்நோட்டுகளை திரும்ப பெறும் பணியை வங்கிகள் தொடங்கியது. இதற்கிடையே புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டது. புதிய 2000 ரூபாய் நோட்டுகள் ஒரளவு பொதுமக்களை எட்டிஉள்ள நிலையில் 500 ரூபாய் நோட்டுகள் கிடைக்காத நிலையே நீடிக்கிறது. இதற்கிடையே ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணியானது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், முன்பு 500, 1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தவரையில் இப்போது புதிய நோட்டுகள் அச்சடிக்கப்படாது என்றும் மத்திய அரசு தெரிவித்து விட்டது.

இந்நிலையில் விரைவில் புதிய 50 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என ஆர்.பி.ஐ. தகவல் தெரிவித்து உள்ளது.

விரைவில் புதிய ரூ. 50 நோட்டுகள் வெளியிடப்படும், புதிய ரூபாய் நோட்டுகளின் வரிசை எண்ணின் பின்னணியில் L என்ற எழுத்து மற்றும் ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் கையெழுத்து இடம் பெற்றிருக்கும் என ஆர்பிஐ தெரிவித்து உள்ளது.

ஏற்கனவே இம்மாத தொடக்கத்தில் புதிய 50 மற்றும் 20 ரூபாய் நோட்டுகள் வெளியீடு தொடர்பான ஆர்பிஐ அறிவிப்பானது விரைவில் வெளியாகலாம் என்றும் பழைய ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து செல்லும் என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post