Title of the document


கருப்புப்பணம் குறித்த தகவல் தெரிந்தால் தெரிவிக்கலாம் எனக் கூறி மத்திய நிதியமைச்சக புலனாய்வுத்துறை ஒரு மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்திருந்தது.

வெள்ளிக்கிழமையன்றுதான் அந்த மின்னஞ்சல் முகவரி தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த நான்கே நாட்களில் 4 ஆயிரம் புகார்கள் மின்னஞ்சலில் குவிந்திருக்கின்றன. மின்னஞ்சலில் புகார் தெரிவிக்கலாம் எனும் அறிவிப்புக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாக நிதியமைச்சக புலனாய்வுத்துறை அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளியன்று மத்திய நிதியமைச்சக புலனாய்வு அமைப்பு blackmoneyinfo@incometax. gov.in எனும் முகவரியைக் கொடுத்து, கருப்புப்பணம் குறித்த தகவல்கள் இருந்தால் இந்த மின்னஞ்சலுக்குத் தெரிவிக்கலாம் என அறிவித்திருந்தது.
அதில் இருந்து அந்த முகவரிக்கு மின்னஞ்சல்கள் குவியத் தொடங்கின. இதுவரையில் நான்காயிரம் மின்னஞ்சல்கள் வந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த மின்னஞ்சல்கள் மூலம் வரும் தகவல்கள் கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைக்கு பெரிதும் உதவியாக இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

நாடு முழுவதும் கணக்கில் வராத பழைய மற்றும் புதிய நோட்டுகள் சுமார் 100 கோடி வரையில் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரதமரின் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு ஸ்டேட் வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ மற்றும் எச்டிஎப்சி வங்கிகளில் நிறைய டெபாசிட்டுகள் செய்யப்பட்டுள்ளன. முறையான கணக்குகளுடன் பணம் டெபாசிட் செய்யப்படுகிறதா என்பது குறித்தும் சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதத்தல் பெரும் தொகை ஏதேனும் டெபாசிட் செய்யப்படுகிறதா என்பது குறித்தும் வங்கிகள் நிதியமைச்சக புலனாய்வுத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளன

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post