Title of the document



ரிலையன்ஸ் ஜியோ-வின் 4 ஜி ஆஃபர் மார்ச் 2017- வரை நீட்டிக்கப்படு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரிலையன்ஸ்நிறுவனம் ஜியோ சிம்மின் 4 ஜி அறிமுகச் சலுகை ஆஃபரை டிசம்பர் மூன்றாம் தேதி வரை அறிவித்திருந்தது. இதன்படி அளவற்ற டேட்டா மற்றும்
அளவற்ற அழைப்புகளை ஜியோ 4ஜி சிம் பயனர்கள் இலவசமாக பெறுகிறார்கள். இந்நிலையில் 100 மில்லியன் பயனாளர்களை அடைவதற்காக இந்த சலுகையினை மார்ச் 2017 வரை நீட்டிக்க ரிலையன்ஸ் ஜியோ திட்ட மிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜியோவின் டேட்டா சேவைகள் ஜிபி ஒன்றிற்கு ரூ.130-140 வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தொலைதொடர்பு ஒழுங்காற்று ஆணையமான ட்ராயின் விதிகளின் படி, ஜியோ உள்பட எந்த தொலை தொடர்பு நிறுவனமும் தாங்கள் வழங்கும் சலுகையை 90 நாட்களுக்கு நீட்டிக்கக் கூடாது.

அதனால் ஜியோ வின் இந்த ஆஃபர் நடைமுறைபடுத்துவதில் சிக்கல் ஏற்படலாம் என்பதால் ஜியோ ‘வெல்கம் ஆஃபர் ’ என பெயரை மாற்றி இந்த சலுகைகளை மீண்டும் வழங்க ஜியோ திட்டமிட்டுள்ளது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post