Title of the document

அரசு ஊழியர்களின் பணி பதிவேடு டிஜிட்டல் மயமாகிறது. கருவூலங்களில் இது கணினியில் பதிவு செய்யப்படும்.அனைத்து சார்நிலை கருவூலங்களிலும், மாவட்ட கருவூலங்களிலும் அரசு ஊழியர்களின் பணி பதிவேட்டை டிஜிட்டல் மயமாக்கும் பணி நடைபெற உள்ளது.
இந்த முறையில் பணி பதிவேட்டின் பக்கங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு கணினியில் பதிவு செய்யப்படும். இவ்வாறு ஸ்கேன் செய்யப்பட்ட பின்னர் ஒரு பிரிண்ட் அவுட் வழங்கப்படும். அதனை அரசு ஊழியர்கள் கவனமாக சரிபார்த்து திருத்தங்கள் இருப்பின் உடன் சரி செய்யவேண்டும். இப்பணிமுடிந்த பின்னர் பணி பதிவேடு ‘டிஜிட்டல் சர்வீஸ் ரெஜிஸ்டர்’ என்று அழைக்கப்படும்.இந்த டிஜிட்டல் மயத்திற்காக பணி பதிவேட்டில் உள்ள முதல் பக்க சுய விபரம் மற்றும் புகைப்படம், பணி நியமன ஆணை பதிவு செய்யப்பட்ட விபரம், பணி வரன்முறை தகுதிகாண் பருவ பதிவுகள், அனைத்து கல்வி தகுதிகள் சார்ந்த பதிவுகள், கல்வி தகுதிகளின் உண்மை தன்மை சார்ந்த பதிவுகள், ஜிபிஎப், சிபிஎஸ் திட்டங்களில் சேர்ந்தமை சார்ந்த பதிவுகள், பணிக்காலம் சரிபார்ப்பு, உயர் கல்வி பயில முன்பு அனுமதி பெறப்பட்ட பதிவுகள், பணியிட மாறுதல், பதவிஉயர்வு சார்ந்த பதிவுகள், ஊதிய நிர்ணயம், தேர்வு நிலை, சிறப்பு நிலை, ஊக்க ஊதியம் சார்ந்த பதிவுகள், பல்வேறு வகையான விடுப்பு பதிவுகள், குடும்ப உறுப்பினர்கள், வாரிசு நியமன படிவங்கள் போன்றவை இவற்றில் சரிபார்க்கப்படும்.

இது தொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள உத்தரவில், ‘பள்ளி கல்வித்துறையில் பணி பதிவேட்டை டிஜிட்டல் மயமாக்கும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்.

பதிவுகளை ஒருமுறை தனி கவனம் செலுத்தி ஆய்வு செய்த பின்னர் பணி பதிவேடுகளை பாதுகாப்பான முறையில் அந்தந்த கருவூலங்களில் சென்று டிஜிட்டல் மயமாக்கும் பணியை நிறைவு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கிட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். முதன்மை கல்வி அலுவலகத்தில் இதற்கென ஒரு பதிவேடு தொடங்கி ஒவ்வொரு நாளும் இப்பணியை நிறைவு செய்த பள்ளிகள் சார்ந்த விபரங்களை பதிவு செய்து கண்காணித்திட வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post