பொறியியல் பட்டதாரிகளுக்கு பொதுத்துறை நிறுவனத்தில் பணி - Kalvi news

Home Top Ad

Post Top Ad

Tuesday, 15 November 2016

பொறியியல் பட்டதாரிகளுக்கு பொதுத்துறை நிறுவனத்தில் பணி


பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு எக்சிகியூட்டிவ் தரத்திலான 153 அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி வாய்ப்புகள் உள்ள துறைகள்: மைனிங், ஜியாலஜி, சர்வே, மெட்டலர்ஜி, கெமிக்கல், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிவில், இண்டஸ்ட்ரியல், ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட், மெடிக்கல் அண்ட் ஹெல்த் சர்வீசஸ், நிதி, எச்.ஆர்., சட்டம், மெட்டீரியல்ஸ் அண்ட் காண்ட்ராக்ட்ஸ், மார்க்கெட்டிங், சேப்டி, என்விரான்மென்ட் மேனேஜ்மென்ட் போன்ற பல்வேறு பிரிவுகள்.
வயது வரம்பு: அதிகபட்சம் 54க்குள் இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான வயது வரம்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அந்தந்த பணிக்கான வயது வரம்பை இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் பி.இ, பி.டெக், எச்.ஆர்., சட்டம், எம்.பி.ஏ., மார்க்கெட்டிங் போன்ற படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.1000 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.500.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2016
ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை எதிர்கால உபயோகத்திற்காக கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.hidustancoper.com என்ற இணையதளத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Post Bottom Ad