அரசு 'இ - சேவை' மையங்களில் ஓய்வூதியர் சான்று பெற வசதி. - Kalvi news

Home Top Ad

Post Top Ad

Friday, 25 November 2016

அரசு 'இ - சேவை' மையங்களில் ஓய்வூதியர் சான்று பெற வசதி.


அரசு, 'இ - சேவை' மையங்களில், ஓய்வூதியம் பெறுவோருக்கு, உயிர் வாழ் சான்றிதழ் வழங்கும் சேவை, துவக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின், கேபிள், 'டிவி' நிறுவனம், மாநிலம் முழுவதும், 486 'இ - சேவை' மையங்களை அமைத்து, அரசு துறைகள் சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது.
நேற்று முதல், கூடுதல் சேவையாக, ஓய்வூதியர்களுக்கு, மின்னணு, உயிர் வாழ் சான்றிதழ் வழங்கும் சேவை துவக்கப் பட்டுள்ளது.'ஓய்வூதியம் பெறுவோர், அதற்கான தகவல்களுடன், ஆதார் எண்ணை தெரிவிக்க வேண்டும். பின், கைவிரல் ரேகையை பதிவுசெய்ததும், சான்றிதழ் அச்சிட்டு வழங்கப்படும். இதற்கு,10 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்' என, அரசு கேபிள், 'டிவி' மேலாண் இயக்குனர், குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

Post Bottom Ad