பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதித்தேர்வுக்கு பயிற்சி பெற, இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - Kalvi news

Home Top Ad

Post Top Ad

Friday, 25 November 2016

பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதித்தேர்வுக்கு பயிற்சி பெற, இன்று முதல் விண்ணப்பிக்கலாம்


பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதித்தேர்வுக்கு பயிற்சி பெற, இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என, சென்னை பல்கலை அறிவித்துள்ளது. பேராசிரியர் பணியில் சேரும் தகுதிக்கான, 'நெட்' நுழைவுத்தேர்வு, ஜனவரியில் நடக்கிறது. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்தும் இத்தேர்வுக்கு, சென்னை பல்கலையில் சிறப்பு பயிற்சி தரப்படுகிறது. இது குறித்து, பல்கலை மாணவர்கள் அறிவுரை பிரிவு இயக்குனர், சக்திவேல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 'நெட்' தேர்வுக்கு, டிச., 10 முதல், 24 வரையில், அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், முதல் தாளுக்கு, பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இரண்டாம் மற்றும் மூன்றாம் தாளுக்கு, டிச., 19 முதல், 30 வரை, சிறப்பு பயிற்சி நடக்கும். இதில் பட்டியலினத்தவர், பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் வருமான உச்ச வரம்புக்கு உட்பட்ட பிற்படுத்தப்பட்டோர் பங்கேற்கலாம். இன்று முதல் விண்ணப்பங்கள் பெற்று, டிச., 7 மாலை, 4:00 மணிக்குள் பூர்த்தி செய்து, சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Post Bottom Ad