'பெஸ்ட்' திட்டம் பள்ளிகளில் அறிமுகம்

அரசு பள்ளிகளில் படிக்கும், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற, 'பெஸ்ட்' என்ற பெயரில், புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக, பொதுத்தேர்வுகளில், அரசு பள்ளிகள், மாநில அளவில், 'ரேங்க்' பெறவில்லை. அதனால், சென்னை அரசு பள்ளி மாணவர்களையாவது, பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இது தொடர்பாக, சிறப்பு திட்டம் கொண்டு வர, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது. அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'போர்டு எக்ஸாம் ஸ்கோர் டிப்ஸ் - பெஸ்ட்' என்ற பெயரில்,புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.இதில், சராசரி மாணவர்கள், சராசரிக்கு மேற்பட்டவர், 70சதவீத மதிப்பெண் பெறுவோர் மற்றும் மாவட்ட அளவில், 'ரேங்க்' பெறும் மாணவர்கள் என, பிரிக்கப்பட்டு உள்ளனர்.

ஒவ்வொரு வகை மாணவர்களும், எந்தெந்த மதிப்பெண்ணில், எத்தனை வினாக்களை, எந்த பாடங்களில் படிக்கலாம் என, கூறப்பட்டு உள்ளது.'இந்த திட்டத்தை முறையாக அமல்படுத்தினால், தனியார் பள்ளிகளை விட, அரசு பள்ளி மாணவர்கள், அதிக மதிப்பெண் பெறலாம்' என, ஆசிரியர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

No comments:

Post a Comment

Popular Posts

 

Most Reading

Follow by Email