கணினி தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு. - Kalvi news

Home Top Ad

Post Top Ad

Friday, 18 November 2016

கணினி தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு.


தமிழக அரசு பணியில் தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணிகளுக்கு அரசு கணினி சான்றிதழ் தேர்வில் (Certificate in computer on office automation) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். (இந்த பணிகளுக்காக நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு, அரசு கணினி சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம் என்றாலும்கூட பணிக்குத் தேர்வு செய்யப்பட்டால் தகுதிகாண் பருவம் முடிவடைவதற்குள் கண்டிப்பாக அத்தேர்வில் தேர்ச்சி பெற்றாக வேண்டும்.
வரும் டிசம்பர் மாதம் நடத்தப்பட வேண்டிய தேர்வு 2017 ஜனவரி மாதம் 7, 8-ம் தேதிகளில் நடத்தப் படுகிறது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 11-ம் தேதி என்று முன்பு அறிவிக் கப்பட்டிருந்தது. தற்போது, ஆன்லைனில் (www.tndote.org) விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 18-ம் தேதி வரையும், பிரின்ட் அவுட் எடுக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பத்தை தேவையான சான்றிதழ் நகல்கள் (எஸ்எஸ்எல்சி மதிப்பெண் சான்றிதழ், தட்டச்சு சான்றிதழ் நகல்) மற்றும் ரூ.530-க்கான டிமாண்ட் டிராப்டுடன் சமர்ப்பிக்க கடைசி தேதி நவம்பர் 25-ம் தேதிவரையும் நீட்டிக்கப்படுவதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் ராஜேந்திர ரத்னு அறிவித்துள்ளார்.

Post Bottom Ad