சீன ஓபன் சூப்பர் பேட்மிண்டன் .. முதல் முறையாக பட்டம் வென்று அசத்தினார் பி.வி.சிந்து
டெல்லி: சீன ஓபன் சூப்பர் சீரிஸ் போட்டியில் சீன வீராங்கனையை வீழ்த்தி இந்தியாவின் பி.வி.சிந்து பட்டத்தை தட்டிச்சென்றுள்ளார்.
சீனாவின் புஜோவ் நகரில் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்றன. மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்துவும் சீனாவின் சன்யுவும் மோதினர். 69 நிமிடங்கள் நீடித்த இப்போட்டி பரபரப்புக்கு பஞ்மில்லாமல் இருந்தது.
இதில் முதல் சுற்றை 21க்கு 11 என்ற செட்டில் கைப்பற்றிய சிந்து அடுத்த சுற்றை 17க்கு 21 என்ற கணக்கில் பறிகொடுத்தார். பின்னர் சுதாரித்து ஆடிய சிந்து அடுத்த சுற்றை 21க்கு 11 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதன்மூலம் சீன வீராங்கனை சன் யுவை வீழ்த்தி பி.வி.சிந்து சாம்பியன் பபட்டத்தை தட்டிச் சென்றார்.
சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பட்டத்தை சிந்து முதல் முறையாக கைப்பற்றியுள்ளார். மேலும் இந்திய வீராங்கனை ஒருவர் சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பட்டத்தை வெல்வதும் இதுவே முதல் முறையாகும்.
அண்மையில் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனை பி.வி சிந்து வெள்ளி பதக்கம் வென்று நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு சிந்து இதுவரை 3 சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் என்பது முக்கியமானது.

No comments:

Post a Comment

Popular Posts

 

Most Reading

Follow by Email