தேசிய கல்வி நாள் கொண்டாட உத்தரவு.

அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில், நவ., 11ல், தேசிய கல்வி நாள் கொண்டாட வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.மத்திய முன்னாள் கல்வி அமைச்சரும், சுதந்திர போராட்ட வீரருமான, மவுலானா அபுல்கலாம் ஆசாத்தின் பிறந்த நாளான, நவ., 11, தேசிய கல்வி நாளாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், பல்கலைகள், கல்வி அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றைஅனுப்பி உள்ளது. அதில், 'தேசிய கல்வி நாளையொட்டி, நவ., 11ல், கல்வி தொடர்பான சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Popular Posts

 

Most Reading

Follow by Email