Title of the document


உடுமலை:பள்ளிகளில் 5 முதல் 8ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு, கணித திறனறிதல் தேர்வு அடுத்த மாதம் 4ம் தேதி நடக்கிறது.இதுகுறித்து,உடுமலை கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர்கண்ணபிரான் கூறியதாவது:தமிழ்நாடுஅறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் கணித திறனறிதல் தேர்வு நடத்தப்படுகிறது.கடந்த ஆண்டுஉடுமலை பகுதியிலிருந்து கோவை அறிவியல் மண்டலத்துக்கு மாணவர்கள் கலிலியோ அறிவியல்கழகம் மூலம் அழைத்துச்செல்லப்பட்டனர்.அங்கு தேர்வுஎழுதிய 20க்கும் மேற்பட்ட மாணவர்கள்ரொக்கப்பரிசுகளையும், சான்றிதழ்களையும் பெற்றனர்.அப்போது,உடுமலை அரசுப்பள்ளி மாணவர்கள் அதிகளவில் கலந்துகொள்ள இயலவில்லை என இயக்குனரிடம் எடுத்துரைக்கப்பட்டது. இதையடுத்து இந்த ஆண்டு முதல் உடுமலையில் தேர்வு நடத்த அனுமதி வழங்கினார்.அதன்படிஇத்தேர்வானது டிசம்பர் 4ம் தேதி நடக்கிறது. மாணவர்கள் கணிதஅறிவை வளர்க்கும் வகையிலும், போட்டித்தேர்வுகள் எழுதுவதற்கும்இத்தேர்வு பயனுள்ளதாக இருக்கும். இத்தேர்வில், 5ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை பயிலும் அனைத்துமாணவர்களும் பங்கேற்கலாம். தேர்வு கட்டணம்,100 ரூபாய்.

உடுமலையில் தேர்வு நடைபெறும். போட்டியில்வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப்பரிசும், சான்றிதழ்களும்வழங்கப்படும். ஒவ்வொரு வகுப்பிலும் முதல் பரிசாக, இரண்டாயிரம் ரூபாய் ஒருவருக்கும், இரண்டாம் பரிசாக, ஆயிரம் ரூபாய் இருவருக்கும்கொடுக்கப்படும்.மூன்றாம் பரிசாக,500 ரூபாய் மூவருக்கும், ஆறுதல் பரிசாக, 250 ரூபாய் 20 பேருக்கும் தரப்படும். அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.பள்ளிகளில் ஆர்வமுள்ள மாணவர்களை இப்போட்டிகளில் பங்கேற்க செய்யலாம்.மாணவர்களின்பெயர்பட்டியலையும், தேர்வு கட்டணத்தையும், கண்ணபிரான், ஒருங்கிணைப்பாளர், கலிலியோ அறிவியல் கழகம், உடுமலை என்றமுகவரி மற்றும் kannatnsfudt@gmail.com என்றஇ-மெயிலிலும் பதிவு செய்யலாம்.

இவ்வாறு, அவர்தெரிவித்தார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post