Title of the document


சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்தியமுறை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்பதற்கான அழைப்புக் கடிதம் இணையதளத்தில் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, இயற்கை மருத்துவம் மற்றும் யோகா, ஹோமியோபதி ஆகிய படிப்புகளுக்கான 2-ஆம் கட்ட கலந்தாய்வு நவம்பர் 21-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை சென்னை அரும்பாகத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்தில் உள்ள தேர்வுக்குழு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்பவர்களுக்கான அழைப்புக் கடிதம் சுகாதாரத் துறையின் www.tnhealth.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
5 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் -ஏ திரவ மருந்து!

சென்னை, நவ. 16: பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்ட மருத்துவ முகாமில் 5 லட்சத்து 15 ஆயிரத்து 345 குழந்தைகளுக்கு வைட்டமின் -ஏ திரவ மருந்து வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு ஆண்டுக்கு 2 முறை வைட்டமின் -ஏ நுண்ணூட்ட சத்து கொடுப்பது அவசியமாகிறது.
இதனை கருத்தில் கொண்டு, பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும், சென்னை மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மையங்களிலும், கடந்த திங்கள்கிழமை (நவ.7) முதல் சனிக்கிழமை (நவ.12) வரை, 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவ மருந்தை அளிக்கும் மருத்துவ முகாம்கள் நடைபெற்றன.
இம்முகாம்களில், 5.15 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் -ஏ திரவ மருந்து கொடுக்கப்பட்டதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post